Skype Shutting Down: முடிவுக்கு வந்த ஸ்கைப் செயலி.. பயனர்கள் அதிர்ச்சி..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரபலமான செயலியான ஸ்கைப்பை நேற்றுடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

May 6, 2025 - 19:15
 0  1
Skype Shutting Down: முடிவுக்கு வந்த ஸ்கைப் செயலி.. பயனர்கள் அதிர்ச்சி..!

சென்னை (Technology News): ஸ்கைப் செயலி (Skype), கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கத்தில், ஆடியோ மற்றும் வீடியோ தொடர்பு உலகில் புதிய முன்னோடியாக அறிமுகமானது. தொடர்ந்து 2004ஆம் ஆண்டு, இதன் பயன்பாடு உலகளவில் விரிவடைய ஆரம்பித்தது. இறுதியாக, 2011ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஸ்கைப் செயலியை சுமார் 8.5 பில்லியன் டாலர்களுக்கு கைப்பற்றியது.

முடிவுக்கு வந்த ஸ்கைப் செயலி:

இன்றைய காலகட்டத்தில், ஜூம் (Zoom) மற்றும் கூகுள் மீட் (Google Meet) போன்ற செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது ஸ்கைப் தளத்திற்கான பயனர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்தது. இதனால், மைக்ரோசாப்ட் தற்போது ஸ்கைப்பை நிறுத்திவிட்டு, தனது முழு கவனத்தையும் டீம்ஸ் (Teams) செயலியில் செலுத்த முடிவு செய்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

டீம்ஸ் செயலி:

இந்நிலையில், நேற்றுடன் (மே 05) ஸ்கைப் செயலி பயன்பாடு முடிவுக்கு வந்தது. இது இலவச மற்றும் கட்டண ஸ்கைப் பயனர்களைப் பாதிக்கும். ஆனால், வணிகத்திற்கான ஸ்கைப்பை அல்ல என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பயனர்களுக்கு டீம்ஸ் செயலியை பயன்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.