பானிபூரியைத் தொடர்ந்து ஷவர்மா எச்சரிக்கை! உண்மையில் ஷவர்மா பாதுகாப்பானதா?
Sawarma is Good or Bad for health
பானிபூரியைத் தொடர்ந்து ஷவர்மா எச்சரிக்கை! உண்மையில் ஷவர்மா பாதுகாப்பானதா?
Side Effects Of Eating Shawarma: இன்று பலரும் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவுகளை விட, ஆரோக்கியமற்ற சுவையான உணவுகளின் மீதே அதிக நாட்டம் காட்டுகின்றனர். அவ்வாறே பானி பூரி, வடை, போண்டா, பஜ்ஜி, சூப், சிக்கன் பக்கோடா, காளான் என மக்கள் சுவைக்காக விரும்பி உண்ணுகின்றனர். இந்நிலையிலேயே ஷவர்மா என்ற புதிய ரெசிபி மக்களிடையே பிரபலமானது. இதில் சைவ, அசைவ ஷவர்மா என பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் கர்நாடகாவில் உணவு சம்பந்தமான பிரச்சனைகள் எழுந்ததிலிருந்து வரிசையாக ஒவ்வொரு உணவின் மீதும் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் படி, ஸ்மோக் பிஸ்கட்டுகள், பஞ்சு மிட்டாய், கபாப் உணவுகள் மற்றும் கோபி மஞ்சூரியன் என அடுக்கடுக்காக நடந்த சோதனையில் தரமற்ற, உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருள்கள் சேர்த்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதனால் இந்த உணவுப்பொருள்களின் விற்பனை தடையும் விதிக்கப்பட்டது. கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் பானி பூரி, கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஷவர்மா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
ஷவர்மா ஆனது மத்திய கிழக்கு நாடுகளின் உணவாகும். இது 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் துருக்கியில் அறிமுகமான உணவு. இது அசைவம் மற்றும் சைவ உணவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதன் பின், இந்தியாவில் ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மற்ற இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
ஷவர்மா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
குறைந்த நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
ஷவர்மா பிடா ரொட்டியானது நல்ல புரதத்தை வழங்கக்கூடியதாகும். இது உடலில் நோய்களைக் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இது நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடவும், நோய்த்தொற்றுக்களைத் திறம்படத் தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள சிறந்த ஊட்டச்சத்து மதிப்புகள் நோயெதிர்ப்புச் சக்தியை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதன் புரதங்களின் உதவியுடன் தசை மற்றும் வலிமையை அதிகரிக்கலாம். இது பசியைக் குறைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் சிறந்தவையாகும். இதன் நல்ல கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் போன்ற ஆரோக்கியமான கலவை இதய ஆரோக்கியத்திற்கு உறுதியளிக்கிறது. இந்த நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பெருமளவில் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆற்றல் அளவை அதிகரிக்க
ஷவர்மாவின் முக்கிய அங்கமாகத் திகழ்வது கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு எரிபொருளின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது உடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றல் மட்டத்திற்கு ஊக்கமளிக்கிறது. மேலும் இதயத் துடிப்பு, சுழற்சி, சுவாசம், செரிமானம், உணவு வளர்ச்சிதை மாற்றம் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கார்போஹைட்ரேட்டுகளின் உதவியுடன் செரிமான அமைப்பை நன்கு பராமரிக்கலாம்.
ஷவர்மா எப்போது பாதுகாப்பற்றது?
ஷவர்மாவில் மாமிசத்தைப் பயன்படுத்தும் போது, அது குளிர்ச்சியான சூழலில் வைக்கப்பட்டு பின்னர் சூடுபடுத்தப்படுகிறது. இதன் காரணமாக, அந்த இறைச்சி சரியாக வேகவைக்கப்படாமல் கிளாஸ்ட்ரிடியம் என்ற பாக்டீரியாவை இறைச்சியில் உருவாக்குகிறது. இது போட்டுலினம் டாக்ஸினாக மாறுகிறது. எனினும், அதிக வெப்பநிலையில் இந்த பாக்டீரியா உயிருடன் இருக்காது. நன்கு சமைத்து, சமைத்த உணவை உடனே சாப்பிடுவது பொதுவாக உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது. எனவே ஷவர்மாவை சரியாக சமைக்காமல் சாப்பிடும் போது அது உயிரிழப்புக்குக் காரணமாகலாம் எனக் கூறுகின்றனர்.
ஷவர்மா உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை, தீமை இரண்டையும் தருவதாக அமைகிறது. வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் ஷவர்மாவை உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெற்று உட்கொள்வது நல்லது. எவ்வாறாயினும், சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்களை உண்பது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
What's Your Reaction?