Praggnanandhaa Vs Gukesh; டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தா......
டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி, தொடரை கைப்பற்றினார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டித் தொடரில், டை பிரேக்கரில் உலக சாம்பியனான குகேஷை வீழ்த்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, தொடரை கைப்பற்றினார்.
குகேஷ்-பிரக்ஞானந்தா சமநிலை
நெதர்லாந்தின் Wijk Aan Zee-ல் நடைபெற்ற 87-வது டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியில், ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற 13 சுற்றுகளின் முடிவில், குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். அதன்பின், 14-வது சுற்றில், அர்ஜூன் ஏரிகைசியிடம் குகேஷும், கிராண்ட் மாஸ்டர் வின்சென்ட் கீமரிடம் பிரக்ஞானந்தாவும் தோல்வியடைந்தனர்.
டை பிரேக்கரில் வென்ற பிரக்ஞானந்தா
14 சுற்றுகளின் முடிவில், குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடனேயே இருந்ததால், டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. அதில், குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்து, பிரக்ஞானந்தா வெற்றி பெற்று, டாடா ஸ்டீல் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்.
இதற்கு முன்னர், இப்பட்டத்தை 5 முறை வென்ற இந்தியாவின் சிறந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியரானார் பிரக்ஞானந்தா.
What's Your Reaction?






