ஹாக்கி விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியமா.?Hockey Rules in Tamil
ஹாக்கி விளையாட்டு விதிகள் | Hockey Rules in Tamil
வணக்கம் நண்பர்களே.! இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று தெரியும். ஆனால் அந்த விளையாட்டு எப்படி விளையாடுவார்கள், எத்தனை வீரர்கள் விளையாடுவார்கள் என்றெல்லாம் தெரியுமா.? ஹாக்கி விளையாட்டு பற்றிய தகவல்களை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
ஹாக்கி என்றால் என்ன.?
ஹாக்கி என்பது வளைதடி பந்தாட்டம் என்றும் அழைப்பர். இது ஒரு குழு விளையாட்டு. ஒரு பந்தை மட்டையினால் அடித்து கோலுக்குள் அடிக்க வேண்டும். கோலுக்குள் செல்லும் போது புள்ளிகள் அளிக்கப்படுகிறது. அதிகப்படியான புள்ளிகள் எந்த அணி பெற்றிருக்கிறதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.
ஹாக்கி விளையாட்டு எத்தனை வீரர்கள்:
இந்த விளையாட்டில் இரண்டு அணிகள் விளையாடுவார்கள். ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்கள் இருப்பார்கள்.
ஹாக்கி மைதானம்:
விளையாட்டு மைதானம் 91.4 மீட்டர் நீளமும் 55 மீட்டர் அகலமும் கொண்டு செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும். மைதானத்தின் நான்கு பக்கங்களிலும் 1.20 மீட்டரிலுருந்து 1.50 மீட்டர் வரை உயரம் கொண்ட கொடி கம்பம் இருக்கும்.
ஹாக்கியில் உள்ள அட்டைகள் எதை குறிக்கின்றன.?
விளையாட்டுகளின் வீரர்களின் விதி மீறலுக்கு ஒரு அட்டை வழங்கப்படும். அவை பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற மூன்று நிற அட்டைகள் வழங்கப்படுகிறது. இதில் பச்சை நிற அட்டை விதிகளை மீற கூடாது என எச்சரிக்கை செய்வதை குறிக்கிறது.
மஞ்சள் நிற அட்டை வீரர்கள் 5 நிமிடத்திற்கு போட்டியிலுருந்து ஓய்வு எடுக்க என்பதை குறிக்கிறது. சிவப்பு நிற அட்டை போட்டியிலுருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.
ஹாக்கி மட்டை பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும்.?
ஹாக்கி மட்டையின் முன் பக்கத்தை பயன்படுத்தி பந்தை அடிக்க வேண்டும். பின் பக்கத்தை பயன்படுத்தினால் பெனால்டி வழங்கப்படும். ஹாக்கி மட்டைகளை உங்களின் தோள்களை விட உயரமாக எடுத்து பந்தை அடிக்க கூடாது.
ஹாக்கி விளையாட்டின் வீரரின் விதிகள்:
ஹாக்கி விளையாடும் போது வீரர்கள் சக போட்டியாளர்களை உடலை பயன்படுத்தி வெளி பகுதிக்கு தள்ளவோ அல்லது தடுக்கவோ கூடாது.
ஹாக்கி வெற்றி:
ஒவ்வொரு ஆட்டமும் 35 நிமிடங்கள் விளையாடப்படும். அதில் 70 நிமிடங்கள் கழித்து விளையாட்டு முடிந்ததும் எந்த அணி அதிக கோல்கள் பெற்றிருக்கிறார்களோ அந்த அணியே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.
What's Your Reaction?