காளான் வளர்ப்பு அதிக மகசூல் பெற சில டிப்ஸ்..! Kalan Valarpu Murai Tamil..!
காளான் வளர்ப்பு முறை (kalan valarpu) பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காளானில் நிறைந்துள்ள குணங்களை இப்போது நாம் தெரிந்து கொள்வோம். காளானில் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது. சிறந்த கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன.
1. காளான் வகைகள்:

காளான் வளர்ப்பு முறை (kalan valarpu) காளான் வகைகள் மொத்தம் சுமார் 20,000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 2,000 வகைக் காளான்கள் இருப்பதாகவும் இதில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான் நாட்டுக் காளான், அரிசிக் காளான் மற்றும் பால் காளான் போன்றவை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையில் கிடைக்கும் காளான்கள் வகையில், நல்லவை என்று நன்கு தெரிந்த பின்பே உண்ண வேண்டும்.
2. காளான் வளர்ப்பு முறை(Kalan :
- காளான் வளர்ப்பு முறையில் (kalan valarpu) சுத்தமான வைக்கோல் 1-2 இஞ்ச் நீளத்தில் வெட்டி 6-8 மணிநேரம் தண்ணீரில் நன்கு அழுத்தி ஊறவைக்க வேண்டும்.
- பின் வைக்கோலை எடுத்து மூடியுள்ள பாத்திரத்தில் ஆவியிலோ (அல்லது) சுடு தண்ணீரில் 2 மணிநேரம் அழுத்தி வைக்கவும்.
- தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட்டு, சுத்தமான தரையில் கைகளால் இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாத அளவிற்கு உலர்த்த வேண்டும்.
- வீரியமான நன்கு வளர்ந்த காளான் வித்து பாக்கெட்டை 10 சம பாகங்களாக பிரித்தல் வேண்டும்.
- P.P. (1 அடிக்கு 2 அடி) கவரில் 5 அடுக்கு வருமாறு இரண்டு படுக்கை 2¾ – 3 வரை இருக்குமாறு தயார் செய்ய வேண்டும்.
- சுத்தமான S.S. (STAINLESS STEEL) கத்தியில் பக்கத்திற்கு நான்கு துளைகள் இட வேண்டும்.
- 20 நாட்கள் இருட்டு அறையில் வைத்து விட வேண்டும். படுக்கை வெள்ளையாக மாறிய பின் தினமும் 3 வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- மொட்டு வைத்த 3 வது நாள் அறுவடை செய்து துளையிட்ட பாலித்தீன் கவரில் எடை போட்டுச் சீல் வைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
3. காளான் வளர்ப்பு– ரசாயன முறை:
- 100 லிட்டர் தண்ணீர்
- 125 துயி பார்மாலின்
- 10 கிலோ வைக்கோல்
- 8 கிராம் பவிஸ்டின் (BASF W/P 50%)
- 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- செய்முறை 4-7 (இயற்கை முறை) வரை பின்பற்றவும்.
4. காளான் வளர்ப்பு முறையில் கவனிக்க வேண்டியவை..!
இந்த காளான் வளர்ப்பு முறையில் நல்ல தண்ணீர், வீரியமான காளான் வித்து, சுற்றுப்புறச் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு.
5. காளான் குடில்

மர நிழலில் 11 x 6, 11 x 30 என்கிற அளவில் (SIZE) கிழக்கு மேற்காகவும், வாசல் வடக்கு அல்லது தெற்காகவும் குடில் அமைக்க வேண்டும்.
6. சிப்பி காளான் வளர்ப்பு தகவல்

- இந்த காளான் வளர்ப்பு முறையில் (kalan valarpu) குடிசை அமைக்கும் பொழுது 10 X 30 அடி என்கிற அளவில் அமைக்கும் போது ரூபாய் 15,000/- வரை செலவு ஆகும்.
- அதுவே 10 X 16 அடி என்கிற அளவில் அமைக்கும் பொழுது ரூபாய் 10,000/– வரை செலவாகும்.
- காளான் குடிசை, மரநிழலில் அமைப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
- போர்வெல் தண்ணீர் பயன்படுத்தும் போது PH அளவு காண வேண்டும். PH 7 க்கு குறைவாக இருந்தால் நன்மை. அதுவே PH அளவு 8 முதல் 9 ஆக இருந்தால் பிளீச்சிங் (Bleaching) பவுடர் பயன்படுத்த வேண்டும்.
- இந்த வகைக் காளான்களை (பெட் மூலம்) குடில்களுக்குள் கட்டித் தொங்க விடுவது ஒரு சிறந்த வழிவகை ஆகும்.
- ஈரப்பதம் ஏற்படுத்துவதற்குக் குடிலுக்குள் 1 HP மோட்டார் மற்றும் ஸ்பிரிங்குலர் (SPRINGLER) பயன்படுத்தலாம். தண்ணீர் பயன்படுத்துவது குளிர்ச்சியான நிலையை உருவாக்குவதற்கே.
- மின் இணைப்பு TARIFF-III A மற்றும் III B போன்ற திட்டங்களில் வாங்க வேண்டும். மின் விளக்கு மற்றும் வைக்கோல் வெட்டும் இயந்திரம் வாங்கிப் பயன்படுத்தினால் வேலை குறைவாக இருக்கும்.
- சிப்பிக் காளானின் அறுவடை சுமார் 50 – 60 நாட்கள் வரை இருக்கும்.
- சுழற்சி முறையில் அனைத்துப் பெட்டியிலும் அறுவடை முடிவதற்கு சுமார் 60 நாட்கள் வரை ஆகும்.
- காளான் அறுவடை முடிந்த பின்பு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- மழைக் காலங்களில் அறுவடை முன் கூட்டியே முடிந்து விடும்.
7. பால் காளான் வளர்ப்பு

பால் காளான்கள் உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் குழி எடுக்க வேண்டும்.
அகலம் 10 அடி, ஆழம் 2 அடி, நீளம் 3 அடி. (சுமார் 1 அடி ஆழத்திற்கு குழி எடுத்த மண்ணை மேல் மட்டத்தில் பயன்படுத்தி 1 அடி உயரத்தை ஏற்றிக் கொள்ளலாம்)
8. மணல்
- குப்பை மண் மற்றும் வயல் மண், கொஞ்சம் கிளிஞ்சல் பவுடர் (Calcium carbonate) மற்றும் வேக வைக்காத சுண்ணாம்பு இவை அனைத்தையம் தண்ணீர் கலந்து வேக வைக்க வேண்டும் (1 மணி நேரம் வரை – உருண்டைப் பதம் வரும் வரை மட்டும்) வேக வைக்கும் பக்குவத்தினை குக்கரில் மேற்கொள்ள வேண்டும்.
- சிப்பிக் காளானைப் போல் பால் காளான்கள் பெட் ஓரங்களில் வளர்வதில்லை ஆகவே 1 பெட்டை 2 கூறுகளாகப் பிரித்து குழிக்குள் வைத்து வளர்க்க வேண்டும்.
- குழிக்குள் காளான்கள் உற்பத்தி நடைபெறுவதால் நேரடி வெயில் படுவதை தவிர்க்க, பந்தல் ஒன்று அமைக்க வேண்டும். இதனை சீட் (Silpaulin Carbonate) பயன்படுத்தி குழிக்கு நிழல் அமைக்க வேண்டும்.
- தண்ணீர் தெளிப்பதற்கு ஸ்பிரிங்குலர் பயன்படுத்தலாம்.பால் காளான்கள் சுமார் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.
- தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் காளான்கள் வகைகள் கேரளச் சந்தையில் அதிகம் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
9. காளான் வளர்ப்பு முறையில் செட் சுத்தம் செய்யும் முறை:
தண்ணீர் 1 லிட்டர், காதி சோப் (ஒட்டும் திரவமாக) வேப்பெண்ணெய் 1 லிட்டர் கலக்க வேண்டும்.மேற்கூறிய அனைத்தும் ஒன்றாகக் கலந்து ஸ்பிரே செய்ய வேண்டும். (ஒவ்வொரு முறை காளான்கள் அறுவடை முடிந்த பின்பு மட்டுமே சுத்தம் செய்தல் வேண்டும்).
10. காளான் வளர்ப்பு (Mushroom Cultivation In Tamil) விதை கிடைக்கும் இடம்:
- 1 விதை பேக் – 250 கிராம் – ஒரு பெட் அமைக்கத் தேவைப்படும்.
- 1 விதை பேக் – ரூபாய் 30/- மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் கிடைக்கும் (10 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்திட வேண்டும்)
What's Your Reaction?






