குடியரசு தினம் கட்டுரை தமிழ்
Republic Day Celebration
குடியரசு தினம் கட்டுரை தமிழ்
அனைத்து நாள் உள்ளங்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..! இன்று இந்த பதிவின் வாயிலாக குடியரசு தின கட்டுரையை பற்றி தான் பார்க்க போகிறோம்..! குடியரசு தினத்தை யாராலும் மறக்கவே முடியாது காரணம் ஜனவரி 26 என்றால் அது தன் நாம் இந்தியாவே கொண்டதும் ஒரு உணர்ச்சி நிறைய தினமாக இருக்கும். ஆகவே அதனை யாராலும் மறக்கவே முடியாது. அதனை நினைவு கூறும் வகையில் பள்ளிகளில் கல்லூரிகளில் குடியரசு தினத்தை பற்றி சில வார்த்தைகளை பேசும் படி சொல்வார்கள். ஆகவே அதனை படிக்க இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!
குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி:
- முன்னுரை
- குடியரசு என்பதன் அர்த்தம்
- இந்திய குடியரசு தினம்
- குடியரசு தினம் கொண்டாடுவதற்கான காரணம்
- முடிவுரை
முன்னுரை:
இந்திய ஒரு குடியரசாக மாறிய நாள் இந்த நாள் இந்திய தேசத்தில் வாழ்விலும் முக்கியமாக நாளாகும். இந்திய நாட்டின் சுகத்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் நினைவு கூறும் சிறப்புடைய நாளாகும்.
ஆங்கிலேயே கொடுங்கோல் ஆட்சி இந்தியா முழுவதிலும் அரங்கேறியது கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரட்பட்ட 1947 ஆகஸ்ட் 15 நாள் இந்தியா சுகந்திரம் பெற்றது. இந்தியக் குடியரசு தின கட்டுரை பற்றி இப்போது காண்போம்..!
குடியரசு என்பதன் அர்த்தம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இத்திய மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாடக அமைந்ததாக கொண்டாடும் நாள் தான் குடியரசு தினமாகும்.
குடியரசு என்றால் மக்களாட்சி என்றும் பொருள்படுகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையே குடியரசு ஆட்சி முறையாகும்.
இந்திய குடியரசு தினம்:
ஆங்கிலேயர் ஆட்சியிலிந்து இந்தியா விடுதலை பெற்ற பின்பு இந்திய அரசியல் நிர்ணய சபை தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரதாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார்.
டாக்டர் அம்பேதகர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. இது மக்களாட்சியை குறிக்கோளாக கொண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பின் 1950 ஆம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினம் இந்தியாவின் முக்கியமான தேசிய நாள்களில் ஒன்றாகும். இதன் முக்கியத்துவம் என்பது, 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இந்தியா விடுதலையை அடைந்த பின்னர், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியில் இந்திய அரசியல் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்ததைக் குறிக்கிறது.
இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்குவது மிகவும் கடினமான செயல் என்று பலரும் கருதினாலும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சட்ட தயாரிப்பு குழு அதனை மிகுந்த கஷ்டங்களுடன் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியா தனித்தன்மை வாய்ந்த மக்களாட்சி நாடாக மாறியது.
குடியரசு தினத்தினை கொண்டாடும் விதம்
இந்த நாளில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பு மிகவும் பிரசித்தமானதாகும். இந்திய ஜனாதிபதி முக்கிய விருந்தினராக கலந்து கொள்வார். அணிவகுப்பில் இந்திய ஆயுதப் படைகளின் வீரர்கள், தொழில்நுட்ப சாதனங்கள், டேப்லோக்கள், மற்றும் மாநிலங்களின் பாரம்பரிய கலாச்சாரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
மாணவர்களும் பொதுமக்களும் தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதத்தைப் பாடுவது வழக்கம். கல்வி நிறுவனங்களில் கலாச்சார நிகழ்ச்சிகள், ஒப்புவிப்புகள் மற்றும் தேசபக்தி பாடல்கள் நடக்கின்றன.
குடியரசு தினத்தின் உன்னத எண்ணங்கள்
இந்த நாள் மக்களாட்சியின் அடிப்படையிலான நம் நாட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பை நமக்குத் தக்கவைத்துக் கொடுக்கிறது. சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூலங்களின் மீதான நம்பிக்கையையும் உறுதியையும் இந்த நாள் மெருகேற்றுகிறது.
குடியரசு தினத்தை வெறுமனே பண்டிகையாக மட்டும் கொண்டாடாமல், இதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செய்வதற்கு உறுதியேற்போம்.
"விதை நாட்டு இளைஞர்களே, வெற்றி நம்மதே!"
1929 ஆம் ஆண்டு லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து தலைவர்காளும் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின் காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான உருவாக்கபட்டதன் அடைப்படையில் முதற்கட்டமாக சுகந்திர நாளாக கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது.
முடிவுரை:
மக்களின் விருப்பிக்கு ஏற்ப தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்து கொள்ளும் போது தான் சரியான ஆட்சி நிலவும் இந்த உலகில் மிகப்பெரிய குடியரசு நாட்டில் குடிமகனாக இருக்க நாம் அனைவருமே பெருமைப்படவேண்டும். உண்மையான குடிமகனாக இருந்து குடியரு தினத்தை கொண்டாடுவோம்..!
What's Your Reaction?