கோவைக்காய் மருத்துவ குணங்கள் | Kovakkai Health Benefits in Tamil

கோவைக்காயை சாப்பிடுவதற்க்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க..

Jan 1, 2025 - 09:34
Jan 1, 2025 - 09:34
 0  17
கோவைக்காய் மருத்துவ குணங்கள் | Kovakkai Health Benefits in Tamil
Kovakkai Health Benefits

Kovakkai Health Benefits in Tamil

கோவக்காய் மருத்துவ குணங்கள்: புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தான வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். அட உண்மை தாங்க கோவைக்காய் நாம் தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும். சரி  வாங்க கோவைக்காய் மருத்துவ குணங்கள் (Kovakkai Benefits in Tamil) பற்றி இந்த பகுதில் நாம் படித்தறிவோம். 

கோவைக்காய் மருத்தவ குணங்கள் | Kovaikkai Benefits in Tamil:

கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்தையும், இந்த கோவக்காய், குணமாக்குகிறது.

உடல்சோர்வு :

மனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும். கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.

தோல் நோய் குணமாக :

கோவைக்காய் பயன்கள்- இதில் இந்த சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் நோயிகளுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.மேலும் இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்ப (Kovaikkai Benefits in Tamil) தற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தம் செய்த பின்பு குடிக்க வேண்டும்.

தலைமுடி பிரச்சனைக்கு:

தலையில் பொடுகு, முடி உதிர்வு, இவைகளுக்கு இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலும்பிச்சை பழத்துடன் சேர்த்து தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.

பல் பிரச்சனைகளுக்கு:

பல் வலி, ஈறுகளில் வலி-வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை, அனைத்தையும் கோவக்காய் ஜூஸ் குறைக்கிறது.

தொப்பை குறைய:

கோவைக்காய் பயன்கள்  (Kovaikkai Benefits in Tamil) – சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது.

இதை சரி செய்ய தினமும் இந்த கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் தொப்பை குறைந்து விடும்.

சர்க்கரை நோய் குணமாக

      சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது

சிறுநீரகத்தில் கல் பிரச்சனைக்கு:

     தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கோவக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.

உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேற:

கோவைக்காய் பயன்கள் (Kovaikkai Benefits in Tamil) – உடலுள் சேரும் கெட்ட கழிவுகளை கோவக்காய் நீக்குகிறது. மசாலா அதிகம் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், கடை சாப்பாடு இவைகளால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும்.

கோவக்காய் கெட்ட கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கிறது.

இதயம் :

இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

புற்று நோய் :

புற்று நோய் என்பது ஒரு கொடுமையான வியாதி மற்றும் மிகுந்த வேதனையை தரக்கூடிய ஒரு நோயாகும். கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும். இதயம் ஒரு வயதிற்கு மேலே அனைவருக்கும் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்டுகிறது.

கல்லீரல் :

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கோவைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow