கன்னியாகுமரி கண்ணாடி பாலம் /Kanyakumari New Glass Bridge /திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: இந்தியாவிலேயே இது முதன்முறை! முதல்வர் திறந்து வைத்த கண்ணாடி பாலம்!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடைடே கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (2025 டிசம்பர் 30) திறந்து வைத்தார். இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே திறக்கப்பட்ட முதல் கண்ணாடி இழைப் பாலம் இதுவாகும்.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு பிரமாண்டமாக 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 1-1-2000 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
திருக்குறள் எனும் அறிவுத் திருவிளக்கை, திக்கெட்டும் பரப்புகின்ற பணியை தன்னுடைய ஒப்பற்ற கடமையாக கருதி செயல்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், குறளோவியம் தீட்டினார். குறளுக்கு விளக்கவுரை தந்தார், சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார், அரசு அலுவலகங்களிலும், பேருந்துகளிலும் குறளை எழுதவைத்து, குறளை எளிய மக்களுக்கு கொண்டு சேர்த்தார்.
அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம்
கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை அமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக 37 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி பெறப்பட்டு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்பு நிதிப் பணியாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
இப்பாலக் கட்டுமான வடிவமைப்பு சென்னை-இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கடல்சார் பொறியியல் பிரிவின் ஒப்புதலையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.
இப்பாலமானது 77 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலம் கொண்ட Bowstring Arch பாலமாகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக பொருத்தப்பட்ட எக்கு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு, நெட்வொர்க் ஆர்ச் முழுமையாக பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை மேல்தள காங்கிரீட், கிரானைட் கற்கள் மற்றும் ஒளிரூட்டும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பூம்புகார் விற்பனையகம்
கன்னியாகுமரி, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் விற்பனையகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். அவ்விற்பனையகத்தில், பித்தளை, வெண்கலம், பைபர், தஞ்சாவூர் ஒவியம், தஞ்சாவூர் கலை தட்டுகள், கண்ணாடி ஒவியம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சிறிய வடிவிலான (Miniacture) அய்யன் திருவள்ளுவர் சிலைகள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் திருக்குறள் புத்தகங்கள் போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?