காதலர் தினம் கவிதைகள்
Kadhalar Dhinam Kavithaigal in tamil

காதலர் தினம் கவிதைகள்
காதல் பிடிக்குள் சிக்கி
காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப் போகட்டும்
காதலர் தின வாழ்த்துக்கள் அன்பே
என் கவலைகளுக்கு நீ
மருந்தாகின்றாய் உன்
கவலைகளை மறைத்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே
இன்னிசையாக இதயதுடிப்பும்
உனை காணும் போதெல்லாம்
ஆனந்த யாழாய்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே
உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள்
முழுதும் வாழ்வேன்
எனை மறந்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலே
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்
காதலர் தின வாழ்த்துக்கள்
மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது
நம் காதல்
காதலர் தின வாழ்த்துக்கள்
மறந்துப் போன
மகிழ்ச்சியை
மறுபடியும் மலர
வைத்தாய் நீ
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே
எனக்கு பிடித்ததை
எல்லாம் நீ ரசிப்பதால்
உனக்கு பிடிக்காததை
நான் தவிர்க்கிறேன்
காதலர் தின வாழ்த்துக்கள் அழகியே
What's Your Reaction?






