காதல் தோல்வி கவிதை வரிகள்
Love failure quotes
காதல் தோல்வி கவிதை வரிகள்
சில காலங்களில் அனைத்தும் மாறிவிடும்
என்று நான் நினைப்பது பொய் என்று
பிரிவின் வலி மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது..
காலம் தான் கடக்கிறது
காதல் நெஞ்சில் உயிரோடு இருக்கிறது
என்பதை என்னுள் புரிய வைக்கிறது.
என் மனம் வலிப்பதற்கு காரணமும் நீ தான்..
அந்த வலிக்கு மருந்தும் நீ தான் அன்பே.!
முன்பு உன்னோடு பேசிக்கொண்டு நாட்கள் நகர்ந்தன
ஆனால் இப்போது உன் நினைவுகளோடு நாட்கள் நகர்கின்றது.
பிரியும் முன் அந்த வலியை உணர முடிவதில்லை..
பிரிந்த பின் அந்த உலகத்தில் இருந்து வெளிவர முடியவில்லை..
முடிவு எதுவென்று தெரிவதில்லை..
தெரிந்தாலும் மாற முடிவதில்லை.
மாற முடியாது என்று நீ சொல்லிய வார்த்தைகளும் பொய்யாகிவிட்டது..
நீ மாறி வேறு ஒருவனை காதலிக்கும்போது
விடியலில் உதித்த ஒரு காதல் என் வாழ்க்கையை இருளில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
நினைவாக நீ இருக்கும் வரையிலும் நிம்மதி என்பது எனக்கில்லை.
ஒருவரிடம் இருந்து பிரிவதென்பது எவ்வளவு வலி நிறைந்ததோ
அதை விட வலி நிறைந்தது..
நம்மை விட்டு பிரிய நினைப்பவரிடம் போகாதே என கெஞ்சுவது.
கவலையை கூட தூக்கி சுமக்கின்றேன்
ஒரு குழந்தையை போல
அதற்கு வலித்து விடக் கூடாதென்று..
ஏனெனில் கண்ணீர் துளியையும்
நீதானே முதன்முதலில்
அறிமுகம் செய்து வைத்தாய்
என் விழிகளுக்கு.!
மறக்க நினைக்கிறேன் உன்னோடு பேசாத நாட்களை அல்ல..
உன்னோடு பேசிய அந்த நாட்களை..!
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமில்லை.
உனை விட்டு விலகுவதா எனத்தெரியவில்லை..
உனை பிரிந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை இல்லை..
என் வலியோ உனக்கு புரியவில்லை
அந்த வலியை உனக்கு கொடுக்கவும் நான் விரும்பவில்லை..
பிரிகிறேன் உனக்காக வாழ்கிறேன் உன் காதல் நினைவுகளில் எரிந்து.!
இன்னும் உன்னை தொலைக்கவில்லை
உனக்கு வேறு வாழ்க்கை வந்த பிறகும்
என் இதயம் உன்னை விட்டு போகவில்லை அன்பே.!
பிரியமே பிரியத்தை கொடுத்து விட்டு..
நீ காணாமல் போவதால் நான் காணாமலே போய் விட்டேன்.
எதிர்பாரா நேரத்தில் வெளிப்படுத்தப்படும் காதலுக்கு..
மதிப்பு கொஞ்சம் குறைவுதான்.!
பிறப்பில் இருந்து இறப்பு வரை
பிரிவில் தான் முடிகிறது
காதல் மட்டுமே பிரிந்தும்
பிரிய முடியாத வலியாய் தொடர்கிறது.!
சந்தோஷமாக இருப்பது போல் பொய்யாக நடித்தே
ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறேன்
உண்மையாகவே நான் சந்தோஷப்பட
நீ என்னோடு இல்லை என்ற கவலை
என்னோடே இருக்கிறது.
என்னை நிராகரிக்கவும் என்னை விட்டு செல்லவும்
உனக்கு எப்போதும் உரிமை உண்டு..
நீ என்னை விட்டு பிரிவதால்
என் மனம் வேதனை படும் என்று
நீ வருத்தப்படாதே.. ஏன் என்றால்
நீ என்னை மறுதலித்த போதே
நான் இறந்து விட்டேன்.!
காதல் தோல்வியை கொடுக்கும் போது தான்
எத்தனையோ பேர் அருகில் இருந்தும்
தனிமையில் சூழ்ந்து விடுகிறோம்..
இறக்காமலே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உன்னுள்ளே என்னைப் புதைத்து விட்டாய்
காதலோடு என்னைத் தனிமையாக்கி
பறந்து சென்றாய் வெளிவர முடியவில்லை..
உன் காதல் தோட்டா இல்லை
என்னுள் இருந்து வெளியே எடுக்க.
மறுத்தும் மறந்தும் போன உன் இதய மலரில்..
தேனெடுக்க சுற்றிக்கொண்டிருக்கும் மதிகெட்ட தேனீ நான்.!
What's Your Reaction?