ISRO Chairman: 'இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன்' - இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் உறுதி!
இந்தியாவிற்கான தெளிவான திட்டம் உள்ளது. எங்களிடம் சிறந்த திறமை இருப்பதால், இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்று நம்புவதாக தெரிவித்தார்.எங்களிடம் சிறந்த திறமை இருப்பதால், இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
புதிய இஸ்ரோ தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன், திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இஸ்ரோவின் தலைவராக வரும் 14ஆம் தேதி நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பதவியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?