நீங்க வாங்குற வெங்காயத்தில் இப்படி கருப்பு அச்சு இருக்கா..? அப்ப அதை வாங்கலாமா, வாங்க கூடாதா?
சமையலுக்கு முக்கிய சுவையே வெங்காயம்தான். அதை வதக்கும் பக்குவத்திற்கு ஏற்ப சுவை மாறும்.அதாவது கண்ணாடி பதத்தில் வதக்கினால் ஒரு சுவை கொடுக்கும். பொன்னிறமாக வதக்கினால் ஒரு சுவை கொடுக்கும். குறிப்பாக பிரியாணிக்கு வெங்காயத்தை அதிகமாக சேர்த்து பொன்னிறமாக வதக்கினால்தான் அதன் சுவையே தூக்கலாக இருக்கும். இப்படி இந்திய சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக வெங்காயம் உள்ளது.
சமையலில் சுவை ஒரு பக்கம் என்றால் அது தரும் நன்மைகளும் ஏராளம். வெங்காயம் செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. குடல் இயக்கத்திற்கும் நல்லது. ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இப்படி அதன் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ம் உடலில் ஏற்படும் சில ஒவ்வாமை பிரச்சனைகள் கண்களில் அரிப்பு, தொண்டை அரிப்பு மற்றும் ஜலதோஷம்போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
வெங்காயத்தை உரிக்கும்போது சில வெங்காயங்களில் கருப்பு அச்சு இருப்பதை பார்த்திருக்கிறீர்களா..? இப்போது வரும் வெங்காயங்களில் அதிகமாக இப்படி கருப்பு அச்சுக்களை காண முடிகிறது. பலருக்கும் இப்படி இருக்கும் வெங்காயத்தை சாப்பிடலாமா..? அந்த கருப்பு அச்சு உடலுக்கு பாதிப்பை உண்டாக்குமா என பல குழப்பம் இருக்கும். உங்களுக்கு பதிலளிக்கவே இந்த கட்டுரை.
வெங்காயத் தோலை உறிக்கும்போது கருப்பு அச்சு இருந்தால், அப்படிப்பட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டால் மியூகோர்மைகோசிஸ் வருமா என்கிற பயமும் பலருக்கு உண்டு.
பொதுவாக வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு அச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது. அதுதான் வெங்காயத்திலும் வருகிறது. இந்த கருப்பு அச்சு இது மியூகோர்மைகோசிஸ் அல்ல. ஆனால் இந்த கருப்பு அச்சு ஒரு வகையான நச்சுவை வெளியிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தை உண்டாக்காது என்றாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்கெனவே அலர்ஜி இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சு இருக்கும் வெங்காயத்தை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் இது காற்றில் பறந்து அதை நுகரும்போது பாதிப்பை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அப்படி கருப்பு அச்சு இருக்கும் லேயரை மட்டும் உறித்து எடுத்த பின் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தும் வெங்காய லேயரில் அந்த கருப்பு அச்சு படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வெங்காயத்தை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்கிறீர்கள் எனில் இந்த கருப்பு அச்சை நீக்கிவிட்டு செய்ய வேண்டும். அதை அப்படியே வைப்பது மற்ற உணவுப்பொருட்களுடன் கலந்து உணவை விஷமாக மாற்றலாம்.
What's Your Reaction?