ரம்ஜானுக்கு நோன்பு இருக்கிறவங்க இந்த மாதிரி சிக்கன் கட்லெட் செஞ்சு பாருங்க!!
How to prepare Chicken cutlet Recipe in tamil

ரம்ஜானுக்கு நோன்பு இருக்கிறவங்க
இந்த மாதிரி சிக்கன் கட்லெட் செஞ்சு
பாருங்க!!
கட்லெட் ஒரு தடவை இந்த மாதிரி பிராப்பரா செஞ்சு பாருங்க. செம்மயா இருக்கும். இது வரைக்கும் நீங்க நிறைய கட்லட் ரெசிபி செஞ்சு இருப்பீங்க. ஆனால் இந்த செய்முறையில் செஞ்சு பாருங்க செம்ம டேஸ்டா இருக்கும். ரம்ஜானுக்கு நோன்பு இருக்கிறவங்க இந்த மாதிரி கட்லட் செஞ்சு பாருங்க மனதுக்கு நிறைவாகவும் இருக்கும். ரெசிபியும் சூப்பராக இருக்கும். நல்லா மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்க இதுல இருக்குற எல்லா பொருட்களையும் சேர்த்து செஞ்சு பாருங்க. கடையில் கிடைக்கிற மாதிரி வீட்டிலேயே செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் சிக்கன் கட்லெட் நீங்க வீட்ல மட்டும் தான் செய்வீங்க.
இதுல உருளைக்கிழங்கு சேர்த்து செய்றதால சுவை ரொம்ப ரொம்ப அருமையாகவே இருக்கும். இந்த டேஸ்டான சிக்கன் கட்லெட் ரெசிபியை இன்னைக்கே கூட நீங்க ரம்ஜான் நோன்புக்கு செஞ்சு பாருங்க கண்டிப்பா கடையில கிடைக்குற மாதிரி இருக்கும். நோம்பு கஞ்சில லைட்டா தொட்டு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான சிக்கன் கட்லட் ரெசிபி ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி செய்றதால சுவை ரொம்ப ரொம்ப கூடுதலாகவே இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு மூணு எடுத்து சாப்பிடுவாங்க. நீங்க ஞாயிற்றுக்கிழமை சிக்கன் வாங்கும் போது ஒரு நாலு அஞ்சு பீஸ் சிக்கன் மட்டும் தனியா எடுத்து வச்சு ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா அதுக்கப்புறம் நிறைய அளவுகளில் கூட செய்யலாம். கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுக்கு நம்ம உருளைக்கிழங்கு சிக்கனையும் வேக வச்சு எடுத்து வச்சுக்கணும். முட்டையில முக்கி எடுத்து பிரட் கிரம்ஸ்ல பிரட்டி எடுத்து பிரிட்ஜ் குள்ள நல்லா செட்டாக விட்டு அதுக்கப்புறம் இந்த ரெசிபியை செய்யணும். அப்பதான் மசாலா உதிராம சூப்பரான கட்லெட் கிடைக்கும். இந்த கட்லட் ரெசிபியை ஸ்நாக்ஸா சாப்பிடும் போது அவ்ளோ சூப்பரா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பாக எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. இதுகூட தக்காளி சாஸ் வச்சு சாப்பிடலாம் மயோனைஸ் வச்சு சாப்பிடலாம். வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுவதால் நிறைய அளவுகளில் செஞ்சு வயிறு நிறைய சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் கட்லெட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
1/4 கி சிக்கன்
1 உருளைக்கிழங்கு
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2 டீஸ்பூன் மிளகு தூள்
1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
2 பெரிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
2 முட்டை
1/4 கப் பிரட் க்ரம்ஸ்
1 துண்டு இஞ்சி
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
5 பல் பூண்டு செய்முறை
ஒரு குக்கரில் சிக்கனை கழுவி சேர்த்து மிளகாய் தூள் மிளகுத்தூள், சீரகத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் ஒரு உருளைக்கிழங்கையும் நறுக்கி சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் மசித்து வைத்துக் கொள்ளவும் சிக்கனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் நறுக்கிய பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் கரம் மசாலா சேர்த்து வதக்கி அதனையும் சிக்கனுடன் சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகள் சேர்த்து அனைத்தும் நன்றாக கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி முட்டையில் கலந்து பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து பத்து நிமிடம் பிரிட்ஜுக்குள் வைக்கவும். பிறகு எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் தயார்.
What's Your Reaction?






