இதுவரைக்கும் இப்படி செய்யலைனாலும் இனி ப்ரோக்கோலி வாங்கினா ஒரு முறை இப்படி ஃப்ரை பண்ணுங்க.
How to prepare Brokkoli Fry Recipe in tamil
1. இதுவரைக்கும் இப்படி செய்யலைனாலும் இனி ப்ரோக்கோலி வாங்கினா ஒரு முறை இப்படி ஃப்ரை பண்ணுங்க.

இதுவரைக்கும் இப்படி செய்யலைனாலும் இனி ப்ரோக்கோலி வாங்கினா ஒரு முறை இப்படி ஃப்ரை
பண்ணுங்க.
காலிஃப்ளவரை வைத்து பல்வேறு வகையான உணவு வகைகளை சமைக்கும் நாம் இந்த ப்ரக்கோலியை
அதிகமாக சமைத்து இருக்க வாய்ப்பு இல்லை. இந்த ப்ரோக்கோலியை பார்த்தவுடன் பலரும் இதை எப்படி
செய்வது என்று தெரியாமல் வாங்காமலும் இருக்கிறார்கள். இந்த பிரக்கோளியில் நம் உடலுக்கு தேவையான
அத்தனை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை பொதுவாகவே
பச்சை காய்கறிகள் உடம்புக்கு நல்லது அது போல தான் இந்த பச்சை நிறத்தில் உள்ள ப்ரகோலியும் நம்
உடலுக்கு அதிக அளவு நன்மை பயக்கக் கூடியது. ஒரு கப் சமைத்த ப்ரோக்கோலியில் நம் உடம்புக்கு
தேவையான விட்டமின் ஏ ,பி, சி, மேக்னீசியம், சத்து புரதச்சத்து இது நம் உடம்பில் உள்ள கொலாஜீனை
அதிகப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகப்படுத்தும். இதில் இன்னும் பல ஏராளமான சத்துக்கள்
அடங்கியுள்ளது. அப்படி ஒரு சத்து மிக்க ஆரோக்கியமான உணவை எப்படி தயாரிப்பது என்று தான் இந்த
சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
செய்முறை
இந்த ப்ரை செய்வதற்கு முதலில் 400 கிராம் ப்ரோக்கோலி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் அடுத்து
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு அதில் கால் டீஸ்பூன் உப்பு கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் சேர்த்து பின் சுத்தம் செய்து வைத்த இந்த ப்ரோக்கோலியும் அதில் சேர்த்து அடுப்பை அணைத்து
விடுங்கள் ஐந்து நிமிடம் வரை இது சுடு தண்ணீரில் அப்படியே இருக்கட்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் அரை
டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு 10 பூண்டு பற்களை ஒன்றும் பாதியுமாக நசுக்கி எண்ணெயில் போட்டு
பூண்டு நிறம் மாறிய பிறகு ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி அதை சேர்த்துக்
கொள்ளுங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கி வந்தவுடன் ஒரு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி
அதையும் சேர்த்து தக்காளியை குழைய வதங்கி விடுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் ஒரு
ஸ்பூன், தனியா தூள் கால் டீஸ்பூன், கரம் மசாலா கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், உப்பு என இவை
அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். அடுத்து நாம் தண்ணீரில்
போட்டு வைத்த ப்ரோக்கோலியை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு இந்த வதங்கிய வெங்காயம்
தக்காளியுடன் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வதக்கி தட்டு போட்டு அப்படியே மூடி விடுங்கள். இது
ஐந்து நிமிடம் வரை நன்றாக வேகட்டும். இடை இடையே மூடியை திறந்து கலந்து விடுங்கள் இல்லை எனில்
அடி பிடித்து விடும்.
. ப்ரோக்கோலி ஐந்து நிமிடம் வரை இந்த மசாலாவில் வெந்த பிறகு ஒரு டீஸ்பூன் மிளகுத்தூளை தூவி
மேலும் ஒரு நிமிடம் வரை கலந்து விட்டு கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை
அணைத்து விடுங்கள். அருமையான சுவையில் ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை தயார். இப்படி ஒரு முறை
ப்ரோக்கோலியை சமைத்துப் பாருங்க இதை சமைப்பது மிக மிக எளிது அதே நேரத்தில் இதில் சத்துக்களோ
ஏராளமாக உள்ளது. சமைக்க தெரியாதவர்கள் கூட இதை சுலபமாக சமைத்து விடலாம். நீங்களும் ஒரு முறை
இப்படி ட்ரை பண்ணி பாருங்க
What's Your Reaction?






