அம்மா கவிதை

Amma Kavithai in tamil

Jan 4, 2025 - 22:08
 0  26
அம்மா கவிதை

அம்மா கவிதை

1.எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான்
காதல் செய்ய யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்..
காத்திருந்தால் எனக்காக சாப்பிடாமல்
என் அம்மா.!

2. நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்
வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.

3. இறைவன் எனக்கு கொடுத்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா.

4. பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன் 

கவிதைப் புத்தகம்


என் நெஞ்சில் அம்மா.!

5. வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக..!

6. நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,
வேறு அமிர்தம் நான் கண்டதில்லை
அம்மா.!

7. கண்களை மூடி பார்த்தாலும்,
கண்களை திறந்தாலும், கனவிலும்..
என் அன்னையே..
அவள் எப்போதும் நினைப்பது
என்னையே..!

8. தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்.!

9. தமிழில் அம்மா என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்
அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.

10. என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்.

11. நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
ஓர் உன்னதமான தெய்வம் அம்மா.!

12. கல்லறையில் உறங்க சொன்னால்
கூட உறங்குவேன்.. அம்மா நீ
வந்து தாலாட்டு பாடினால்.

13. உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!

14. பத்து மாதம் சுமை, ஒரு மணிநேரம் வலி,
அனைத்தும் மறந்தாள்..
குழந்தையின் முதல் அழுகை
சத்தம் கேட்டதும்.. அம்மா.!

15. முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே.

16. நான் பார்த்த முதல் அழகியும் அவளே..
எனது உலக அழகியும் அவளே
என் அம்மா.

17. உலக அதிசயம் காண ஆர்வமில்லை..
அன்னையே உன்னை கண்ட பின்.

18. அம்மா அழகு என்றால் நீ..
அம்மா என்று அழைப்பதில்
அழகும் அழகு பெறுகிறது.

19. அழுக்கு தேகம், கலைந்த கூந்தல்,
கிழிந்த சேலையிலும் கடவுளாக
தோன்றுகிறாள் அம்மா.

20. கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்..
வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்..
மறுபிறவி பெற்று உனக்கு
உயிர் தருகிறாள் அன்னை.

21. அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட
அனைவருமே அன்பானவர்கள்..
அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!

22. நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.

23. வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும் நாம் ரசிப்பது
நிலவை தான்..
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.

24. எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.!

25. துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.

26. தாயை வணங்குவோம்
தாய்மையை போற்றுவோம்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow