அம்பேத்கர் அறிவோம்........

Mar 10, 2025 - 10:49
 0  4
அம்பேத்கர் அறிவோம்........

ஆயிரமாயிர ஆண்டுகளாய்
அடிமை யாக்கினாரை=அண்ணல்
அதிரச் செய்தார்………………………
விழுகிறவீழ்கிற ஆடுகளாய்
மடமை செய்தோரை=அண்ணல்
மிரளச் செய்தார்…………………………….

அதிரடி படைதிரட்டி
அறிவாயுத நிதிபுரட்டி=நம்
அடிமைத்தன மறுத்தார்………………..

சிதையுண்ட கல்கூட்டி
சிற்பமாய் நிலைநாட்ட=அவர்
சிந்தனை யுளியெடுத்தார்……………

இருட்டில் கிடந்தநம்மை
இணையற்ற மனிதராக்க=அவர்
இந்திய சட்டம்தந்தார்……………

இனிநாங்கள் ஆடல்ல
இணையில்லா சிங்கமென்று=அவர்
இராணுவ மொழிதந்தார்……………….

கொத்தடிமை பிறப்பென்று
கொக்கரித்த கூட்டங்களை=அவர்
கோயிலுக்குள் நுழைந்தடித்தார்……………

இந்துமத கோரங்களை
இயலாதோர் பொய்களென்று=அவர்
இடுகாட்டில் சுட்டெரித்தார்…………………

இனியெப்போதும் பிறப்பதில்லை
இவர்போல ஓரறிஞ்சன்=நாம்
இவர்வழி பயணிப்போம்……………..

உலகுள்ளவரை மறைவதில்லை
உத்தமர்தம் அறிவாற்றல்=நாம்
உள்ளமேற்று துதிப்போம்…………….

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.