புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?
புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் என்னாகும்? எப்படி இருக்கும்?
ஏன் பெயர் வைக்கப்படுகிறது?
ஓராண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் உருவாகக்கூடும். அவை உருவான நாள், மாதம் ஆண்டு, இடம் ஆகியவற்றை மட்டும் சொல்லும்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம். வானிலை மற்றும் காலநிலையை ஆய்வு செய்வோர், அறிவியலாளர்கள், பேரிடர் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இம்முறை உதவுகிறது. ஒரு புயலை அடையாளம் காணுதல், உருவாகும் விதத்தை அறிவது, எளிதாக நினைவில் கொள்வது, விரைவாக எச்சரிக்கைகளை வழங்குவது என பலவற்றிற்கும் இது உதவிகரமாக உள்ளது.
பொதுவாக வெப்பமண்டலக் கடற்பகுதிகளில் புயல்கள் உருவாகின்றன. அவற்றின் சீற்றம் ஒரே அளவாக இருப்பதில்லை. அவை உருவாகும் இடத்திற்கேற்ப மாறுபடுகின்றன. தென் பசிபிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றத்திற்கு ‘புயல்’ (Cyclone) என்றும், வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக், கிழக்கு வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றம் ‘சூறாவளி’ (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது. வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் கடல் சீற்றம் ‘கடும் புயல்’ (Typhoone) என்று உலக வானிலையாளர்களால் சொல்லப்படுகிறது.
எப்படி பெயர் வைக்கப்படுகிறது ?
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதிலும் நிலவும் தட்பவெட்ப நிலைகளைக் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு உலகத்தினை 7 தட்பவெட்ப மண்டலங்களாக பிரித்துள்ளது. அதில் இந்தியா, வட இந்தியப் பெருங்கடல்" மண்டலத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்தியா உட்பட வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இந்த மண்டலத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.
What's Your Reaction?