அதிர்ஷ்டமும் அறிவும் | தமிழ் கதைகள் | Luck and Knowledge | Fairy Tales In Tamil
Tamil short stories

அதிர்ஷ்டமும் அறிவும் | தமிழ் கதைகள் | Luck and
Knowledge | Fairy Tales In Tamil
அதிர்ஷ்டமும் அறிவும் | தமிழ்
கதைகள் | Luck and Knowledge | Fairy Tales In Tamil
அதிர்ஷ்ட தேவதையும் அறிவு தேவதையும் ஒருநாள் தங்களுக்குள் யார் பெரியவர்கள் என்று வாக்குவாதம் பண்ணி கொண்டு இருந்தார்கள். அவர்கள் இரண்டு பேரும் அவர்கள் இருவரில் யார் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள பூமிக்கு சென்று ஒரு ஏழை விவசாயி மீது சோதனை நடத்தினர்.
அந்த விவசாயி வாழ்ந்து வந்தது ஒரு சின்ன கிராமத்தில். முதலில் அதிர்ஷ்ட தேவதை தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். “அவர்கள் விவசாயி கொண்டிருந்த மொத்த கோதுமை நிலத்தையும் முத்துக்கள் விளையும் நிலமாக மாற்றினார்கள்”.
அடுத்த நாள் நடந்த அந்த அதிசயத்தை பார்த்து அந்த விவசாயி ரொம்பவே ஆச்சரியப்பட்டார். “நான் இந்த மாதிரி ஒரு விஷயத்தை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை” என்றார் அவர்.
அதே நேரத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த மகாராஜா, முத்துக்கள் விளையும் அந்த நிலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். உடனே மகாராஜா, விவசாயிடம், “ஓ. விவசாயி இந்த மொத்த முத்துக்களை எடுத்துக் கொண்டு என்னுடைய கோட்டைக்கு வா, நான் உனக்கு நிறைய காசு தருகிறேன். அது மட்டுமல்ல என்னுடைய மகளையும் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்” என்றார்.
அதற்கு அந்த விவசாயி சொன்னார், “மகாராஜா இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்க நான் மிகவும் அதிஷ்டப்பட்டிருக்கிறேன்”. இளவரசியை திருமணம் செய்த பிறகு முதல் நாள் ராத்திரி அந்த இளவரசி விவசாயி அருகில் வந்து உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீரென்று அந்த விவசாயிக்கு, “ஒரு அரக்கி ஒருவரின் அருகிலிருந்து கொண்டு அவரை விழுங்கிய கதை ஞாபகம் வந்தது”.
அந்த இளவரசியையும் அரக்கி என்று நினைத்துக்கொண்டு அந்த விவசாயி கோட்டையை விட்டு அடித்து பிடித்து ஓடி கொண்டான். இதைக் கேள்விப்பட்ட மகாராஜா ரொம்பவே கோபப்பட்டார். அவர் உடனே தன் காவலாளிகளிடம் “அந்த விவசாயி எங்கே இருந்தாலும் பிடித்துக்கொண்டு வந்து தூக்கிலிடுங்கள்” என்றார்.
அப்போது அறிவு தேவதை அதிர்ஷ்ட தேவதையிடம், “நீ என்ன செய்து வைத்திருக்கிறாய் பார்” என்றது. அந்த விவசாயியை தூக்கிலிட சென்ற போது திடீரென்று விவசாயின் உடம்பில், அறிவு தேவதையின் புத்திசாலித்தனம் புகுந்தது. அந்த விவசாயிக்கு திடீரெண்டு தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று புரிந்தது. அவன் உடனே,” இங்கே பாருங்க மகாராஜா.. எதுக்காக இப்போ என்ன தூக்கிலிட போறீங்க?” என்று கேட்டான். காரணம் தெரிந்த பிறகு தான் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், அதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்று அவன் யோசித்தான். அப்போது அவன் சொன்னான், “நேத்து ராத்திரி நதியில் யாரோ மூழ்கும் நிலையில் காப்பாற்றுங்கள் என்று கத்திய சத்தம் கேட்டது. திருமணத்தன்று யாராவது இறந்தால், அது அபசகுணம் என்று கூறுவார்கள் எனவே தான் நான் அவரை காப்பாற்ற ஓடி சென்றேன்” என்றான் அந்த விவசாயி. அதைக் கேட்ட மகாராஜா மிகவும் சந்தோஷத்துடன் அந்த விவசாயியை மன்னித்து விட்டார். அது மட்டும் அல்ல “அதிர்ஷ்டத்தை விட அறிவும் புத்திசாலித்தனமும் தான் சிறந்தது” என்று அந்த தேவதைகள் முடிவு செய்தனர். அந்த விவசாயியும் இளவரசியும் அதன் பிறகு சந்தோஷமாக வாழ ஆரம்பித்தனர். நீதி : புத்திசாலித்தனமே செல்வத்துக்கு பாதுகாப்பு. அதிர்ஷ்டத்தை விட புத்திசாலித்தனமே சிறந்தது.
What's Your Reaction?






