டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் கைகோர்த்த ஜியோ நிறுவனம்.. ஓடிடி ரசிகர்களுக்கு இனிமே ஜாக்பாட் தான்!
மும்பை: ஜியோ நிறுவனமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரும் ஒன்றிணையவுள்ள நிலையில் அதன் புதிய பெயர் தற்போது வெளியாகியுள்ளது.

மக்களை குதூகலிக்கும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஓடி்டி பிளாட்பார்ம்கள் இன்று கொட்டி கிடக்கின்றன. அந்த வகையில், நினைத்த நேரத்தில், பிடித்த படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் டெக்னாலஜியும் வளர்ந்துவிட்டன. பிடித்த நடிகர் மற்றும் நடிகைகளின் படத்தை திரையில் கண்டு ரசிக்க ஒரு கூட்டம் இருப்பதை போன்று ஓடிடி-யில் பார்க்க பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்டாலே போதும், ஒவ்வொருவரிவரின் வீட்டிலும் கிரிக்கெட் கொண்டாட்டம் தான். அதிலும், கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஜியோ நிறுவனத்தின் செயலி முக்கிய அங்கமாக வகிக்கிறது. ஸ்மார்ட் போன் உலகத்தில் ஜியோ இல்லாத வீடுகளே இல்லை. அந்த வகையில் இந்திய அளவில் ஜியோ நிறுவனத்தின் செயலி அப்ளிகேஷன்களை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
ஜியோ:
ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஏற்கனவே தமிழ் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், படங்களை கண்டு களிக்கலாம். அதேபோன்று ஜியோ தயாரிப்பில் வெளியாகும் இந்தி வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் தமிழ் டப் செய்யப்பட்டு ஸ்டீரிமிங் செய்யப்படுகிறது. ஓடிடி தளத்தில் ஹாட் ஸ்டார்: ஓடிடி தளத்தில் Disney HotStarக்கும் பல சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த HBO Max கண்டெண்டுகள் மற்றும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை உள்ளிட்டவை ஜியோவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹாட்ஸ்டாரின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஓடிடி படம் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது.
ஜியோ - டிஸ்னி ஹாட்ஸ்டார்:
டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் ஜியோ நிறுவனத்துடன் போட்டுள்ள புதிய ஒப்பந்தத்தால் வால்ட் டிஸ்னியின் கண்டெண்டுகளை ஒளிபரப்பும் உரிமையை ஜியோ பெற்றுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் மொத்தமாக ஜியோவுடன் இணைக்கப்படுகிறது.இதற்கென்று புதிய ஓடிடி தளம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ ஸ்டாராக வரும் ஓடிடி தளம்:
ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் புதிய ஓடிடி தளம் வெளியாக இருந்த நிலையில், இந்த பெயரில் ஏற்கனவே பெயர் பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே பெயரை ஓடிடி தளமாக வைக்க ஜியோ நிறுவனம் முயற்சித்த போது ரூ.16 கோடி விலை கேட்டதால் அதற்கான முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், ஜியோ ஸ்டார் என்ற பெயரில் ஓடிடி தளம் உருவாகியுள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு IOS தளத்திலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடி படங்கள்:
அமேசான், நெட்பிளிக்ஸ், சோனி உள்ளிட்ட பிற ஓடிடி தளங்களில் ஆங்கிலம் மொழி படங்கள் மற்றுமின்றி இந்தி, தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழி படங்களையும் ஓரே இடத்தில் கண்டு ரசிக்கும் தளமாக ஓடிடி உள்ளது. தற்போது ஜியோ ஸ்டார் அதேபோன்று மக்களை குதூகலிக்கவும், பொழுதுபோக்கு நிறைந்த புதிய சீரிஸ்களுடன் களமிறங்கவும் உள்ளது.
What's Your Reaction?






