எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிப்பு
இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இலக்கிய அமைப்பு இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. பாரதிய பாஷா விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது.
நவீன தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், பயண நூல்கள், சிறுவர் நூல்கள், சினிமா திரைக்கதை, வசனம் மற்றும் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். சஞ்சாரம் நாவலுக்காக 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கும், கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவித்துள்ளது.
மேலும், பாரதிய பாஷா விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா 01.05.2025 அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






