Valentine's Day Colors: காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் அன்றைய தினத்தில் அவர்கள் அணியும் உடையின் நிறத்தில் இருந்து பல விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள் அந்த வகையில் பிப்.,14ம் தேதி நடக்கவுள்ள காதலர் தினத்தில் எந்த நிற உடை எதை பிரதிபலிக்கும் தெரியமா?

காதலர் தினம் ஒவ்வொருவரது வாழ்விலும் மிகவும் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கும். காதலர் தினத்தில் அழகான காதல் நினைவுகளை கடக்காத ஆட்களே இல்லை என்று சொல்லி விடலாம்.
இவ்வாறு காதல் ஒவ்வொருவரது மனதில் ஒவ்வொரு பரிமானத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக காதலர் தினம் காதலர்களை சேர்த்து வைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
இன்றைய 80கள் மற்றும் 90களில் பிறந்தவர்களுக்கான காதலர் தின கொண்டாட்டம் என்பது மிகவும் வித்தயாசமானதாக இருந்தது. ஆண்களும் பெண்களும் அவ்வளவாக பேசிக்கொள்ளாத அந்த காலத்தில் ஒருவர் காதலர் தினத்தன்று அணியும் உடைகளின் வண்ணத்தில் இருந்தே அவர்களின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
அந்த வகையில் காதலர் தினந்தன்று அணியும் உடையில் எந்த நிற உடைக்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம்.
எண் | நிறம் | காரணம் |
1. | நீலம் | காதலர்/காதலியிடம் காதலை சொல்லி விட்டேன் |
2. | பச்சை | காதலர்/காதலிக்காக காத்திருக்கிறேன் |
3. | சிவப்பு | ஏற்கனவே ஒருவருடன் காதலில் இருக்கிறேன் |
4. | கருப்பு | காதலில் ஈடுபாடுஇல்லை |
5. | வெள்ளை | எனக்கான திருமண ஏற்பாடுகள் நடக்கிறது |
6. | ஆரஞ்சு | காதலை இன்று வெளிப்படுத்தவுள்ளேன் |
7. | பிங்க்/ இளஞ்சிவப்பு | காதல் அழைப்பு வந்துவிட்டது, அதை ஏற்று கொண்டு விட்டேன் |
8. | பர்பிள்/க்ரே | காதல் அழைப்பு வந்தது. அதை நிராகிரிக்கிறேன். |
9. | மஞ்சள் | ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வியாகிவிட்டது, எனக்கு ஏற்ற சிறந்த ஜோடியை தேடுகிறேன். |
10. | ப்ரெளன் | ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வியாகிவிட்டது, சில காலங்களுக்கு காதல் வேண்டாம் என நினைக்கிறேன்..! |
பெரும்பாலானோரின் காதல் நிலை இந்த 10 நிலைப்படாட்டிற்குள் அடங்கிவிடும். அதனால் ஒருவர் காதலர் தினத்தன்று மேலே குறிப்பிட்ட நிறத்தில் ஆடைகள் அணிந்து உங்கள் காதல் நிலைப்பாட்டை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் ஆடை முழுவதும் மேலே குறிப்பிட்ட நிறமாக இருக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் ஆடையில் உள்ள பெரும்பான்மையான நிறம் மேலே கொடுக்கப்பட்டுள்ள நிற பட்டியலில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்
What's Your Reaction?






