வாழை இலையில் சாப்பாடு வியக்க வைக்கும் நன்மைகள்

நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று.

Feb 5, 2025 - 14:39
 0  6
வாழை இலையில் சாப்பாடு வியக்க வைக்கும் நன்மைகள்

வாழை இலை சாப்பிடுவது, ஆரோக்கியத்திற்கு பல வகைகளை நம்மை அளிக்கக் கூடியது மருத்துவ குணம் நிறைந்த வாழை இலையில் சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வாழையின் தண்டு முதல் இலை வரை, அதன் பழம் காய், பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாழை இலையில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரச்சத்து என சத்துக்கள் காணப்படுகின்றன.
வாழை இலையின் மேற்புறத்தில் குளோரோஃபில் என்ற பொருள் நிறைந்து இருப்பதால், சூடாக வாழை இலையில் போட்டு உணவு உண்ணும் போது, அதன் சத்துக்கள் உணவுடன் கலந்து நமக்கு ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூட்டுகின்றன.
வாழை இலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் வாழை இலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் காணப்படுவதால், செல் சிதைவு ஏற்படாமல் காத்து, முதுமை நம்மை அண்டாமல் தடுக்கிறது
வாழை இலையில் உள்ள குளோரோபில், வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. தீ உங்களை ஆற்றும் சக்தி கூட வாழை இலைக்கு உண்டு. அல்சர் புண் ஆற்றும் திறன் கொண்ட வாழை இலை, புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது
ரத்தம் உறைவதை தடுக்கும் ஆற்றல் வாழை இலைக்கு உண்டு. எனவே பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்க தினமும் வாழ இலையில் உணவு சாப்பிடலாம்.
வாழை இலையில் பேக் செய்யப்படும், காய்கள் பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கிரம் வாடி போகாமல் பசுமையாகவே இருக்கும். அதற்குக் காரணம் அதற்கு உன் குளிர்ச்சியான தன்மை, மற்றும் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை.
சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. அதோடு, சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும். அதனால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வாழை இலையில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், நிவாரணம் கிடைக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0