உசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்
உசைன் போல்ட் - உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர்.
உசைன் போல்ட் ஜமைக்கா நாட்டின் ‘ஷீர்வுட் கன்டென்ட்’ என்ற சிறு நகரில் 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் நாள் பிறந்தார். இவரது தந்தை ‘வெல்லெஸ்லி போல்ட்’ ஒரு சிறு மளிகை கடை நடத்தி வந்தார். தாய் ‘ஜெனிபர் போல்ட்’ இல்லத்தரசி. இவருக்கு ‘சாடிக்கி’ என்ற சகோதரர் உண்டு.
தனது கல்வி படிப்பை போல்ட் துவங்கியது ‘வால்டென்சியா துவக்க பள்ளி’யில் இருந்து தான். இங்குதான் அவர் தனது திறமையை உணர்ந்து அதில் கவனம் செலுத்த துவங்கினார். பள்ளியின் ஓட்டப்பந்தயங்களில் முதன்மையான வீரராக ஜொலித்தார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து இவர் படைத்த சாதனை தான் “உலக சாதனை”யாக இன்று வரை உள்ளது. அது போலவே 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை 19.19 வினாடிகளில் கடந்தது தான் இன்றும் உலக சாதனை.
What's Your Reaction?






