மண்ணின் வகைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..! | Types of Soil in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய பதிவில் மண் வகைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். மண் என்பது பலவகை கரிம பொருட்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருட்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவை ஆகும். இந்த மண் புவியின் மேல் உருவாக்குவதால் இது புவியின் தோல் எனப்படுகிறது.பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைக்கு உட்படுத்தும் பொழுது மண்ணாக உருவாக்கப்படுகிறது. இத்தகைய மண்ணில் கனிமம் 45%, கரிமப்பொருட்கள் 5%, காற்று 25%, நீர் 25% போன்ற கூட்டு பொருட்களை கொண்டுள்ளது. மண்ணை பற்றி இன்னும் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சரி இன்றைய பதிவில் மண்ணின் வகைகள் மற்றும் அதன் தன்மைகள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Jan 22, 2025 - 11:21
 0  17

1. மண்ணின் வகைகள் | Types of Soil in Tamil:

மண்ணின் வகைகள் | Types of Soil in Tamil:

வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், மலை மண், பாலை மண் என ஆறு வகைப்படும்.

  • வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரை சமவெளிகளில் காணப்படும்.
  • கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
  • செம்மண் உருமாறிய பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது.
  • சரளை மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது.
  • மலைமண் மலைச்சரிவுகளில் காணப்படுகிறது.
  • பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.

2. வண்டல் மண்:

வண்டல் மண் மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி, கொடி, தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை விவசாயத்திற்கு மிகவும் சிறந்ததாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது.

3. கரிசல் மண்:

கரிசல் மண் என்பது ஒரு வகையான மண், இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது.

4. செம்மண்:

இதுவும் ஒரு மண் வகை தான் இது பொதுவாக சிவப்பு நின்றதில் இருக்கும். செம்மண்ணில் கேரட், பீட்ருட் கிழங்குகள் பயிரிடப்படுகிறது. இந்த செம்மண் தமிழ் நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

5. சரளை மண்:

சரளை மண் மலைப் பிரதேசங்களில் காணப்படுகின்றது. இந்த மண்ணை துருக்கள் மண் என்றும் சொல்வார்கள். இந்த மண்ணில் பூக்கள், வேர்க்கடலை, நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற திணைவகை பயிர்கள் நன்றாக வளரக் கூடியவை.

6. பாலை மண்:

இந்திய கடற்கரை ஓரங்களிலும் பாலைவனங்களிலும் காணப்படும் இந்த மண் வகையில் பயிர்கள் வளராது. உப்பு, கருவாடு போன்றவற்றை உலர்த்த மட்டுமே இவ்வகை மண் பயன்படும்.

7. மலை மண்:

மலை மண் பொறுத்தவரை பனிமலை வெப்பநிலை வேறுபாடுகளால்பௌதிக சிதைவின் காரணமாக உருவாகிறது. காலநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்த மண்ணில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக காணப்படுகிறது. இந்த மண்ணிலும் சில வகையான பயிர்களை விவசாயம் செய்யலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0