டிண்டரின் பிரேக்அப் டிரக்

“உன் காதல் இன்றியும் வாழ்வேன் பாரடி” முன்னாள் காதலன்/ காதலியின் நினைவுகளை அழிக்கும் வகையில், அவர்களை நினைவுப்படுத்தும் பொருட்களை வீசி எறிய பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துள்ளது TINDER நிறுவனம். 'பொய் வாக்குறுதிகள், பழைய நினைவுகளை இதில் போட்டு அழித்திடுங்கள்' எனக் கூறி பரப்புரை செய்துவருகிறது

May 2, 2025 - 20:23
 0  1
டிண்டரின் பிரேக்அப் டிரக்

டின்டர் ஆப் தற்சமயம் டேட்டிங் செயலிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது.

இந்த டிரக்கில் காதல் நினைவால் நம்மிடம் உள்ள காதல் நினைவு சின்னங்களையும் நாம் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளையும் இதில் தூக்கியெறிந்து விடலாம்

ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டர், சமூக ஊடகங்களில் "உணர்ச்சிப் பைகளை அப்புறப்படுத்தும் பிரிவு" என்ற தலைப்பில் ஒரு புதிய பிரச்சாரத்தை வெளியிடுகிறது, இது பெரும் பரபரப்பையும் சில கண்ணீரையும் ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சாரம் பயனர்கள் கடந்த கால உறவுகளுடன் தொடர்புடைய பொருட்களை உண்மையில் அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது, இதனால் ஒரு நபர் உண்மையில் போலி கனவுகளையும் இழந்த நம்பிக்கையின் உணர்வுகளையும் தூக்கி எறிய முடியும்.

மும்பை வீதிகளில் வலம்வர தொடங்கியுள்ள இந்த டிரக் ... தனது பழைய காதல் தோல்வி வாழ்க்கையில் இருந்து விடுபட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றவர்களை அதிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை வாழ ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வேடிக்கையான அதே நேரம் நம் உணர்வுகளை வெளிக்கொணர  பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
 

இதுபோன்ற டிரக் சென்னையிலும் அறிமுகப் படுத்தப்பட்டால் எவ்வாறு இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.