தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைவு
Today Gold rate

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைவு..
1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,260-க்கு விற்பனை!,
ஜனவரி 4-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்திருக்கிறது. புத்தாண்டு பிறந்ததிலிருந்து தங்கம் விலையில் ஏற்றம் மட்டுமே இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் குறைந்திருக்கிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,871-க்கும் விற்பனையாகிறது.
1 சவரன் தங்கம் இன்று 360 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்றைய (03/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,260-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 58,080-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.72,600-க்கும் விற்பனையானது. "தங்கமா? சென்செக்ஸா?.. எது 2025-ல் முதலில் 1,00,000-ஐ தொடும்? " 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,920-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 63,360-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 79,200-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,995-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,960-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,950-க்கும் விற்பனையானது. இன்றைய (04/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 45 குறைந்து ரூ.7,215-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 360 குறைந்து ரூ. 57,720-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.450 குறைந்து ரூ.72,150-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 49 குறைந்து ரூ. 7,871-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 392 குறைந்து ரூ. 62,968-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 490 குறைந்து ரூ. 78,710-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 35 குறைந்து ரூ. 5,960-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 280 குறைந்து ரூ.47,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 350 குறைந்து ரூ. 59,600-க்கும் விற்பனையாகிறது. " புத்தாண்டையொட்டி அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. 1 கிராம் தங்கம் ரூ. 7,110-க்கு விற்பனை!" வெள்ளி விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை கிராம் 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 90,000-த்திற்க்கு விற்கப்படுகிறது.
What's Your Reaction?






