தமிழ் கவிதைகள்
Tamil kavithaigal

தமிழ் கவிதைகள்
அன்பு ஒருபோதும்
தோற்பதில்லை
அதிகமாக அன்பு
வைத்தவர்கள் தான்
தோற்கடிக்கப்படுகிறார்கள்
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம் நம்மை
தவிர ஏதும் இல்லை
என்று நினைப்பது ஆணவம்
நான் விடும் மூச்சு காற்றில்
தான் நீ வாழ்கிறாய் என்னை
அழிப்பது உன்னை நீயே
வதைப்பதற்கு சமம்
இப்படிக்கு மரங்கள்
நீண்ட பிரிவிற்குப் பின்
மீண்டும் பார்க்கும்போது
கோபம் இருக்காது
வருத்தமும் வலியுமே
மேலோங்கி இருக்கும்
வாய்ப்புகளை உருவாக்க
தெரியாதவர்களை விட
வாய்ப்புகளை பயன்படுத்தத்
தெரியாதவர்கள் தான் அதிகம்
இன்பமும் துன்பமும்
ஆற்று வெள்ளம்
போன்றது நிலையாக
நிற்காது ஓடி விடும்
நண்பனை நம்பு துரோகியை கூட நம்பு ஆனால் சொந்தத்தை நம்பாதே
தயங்கி நிற்பவர்கள் ஒரு போதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை
காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்
ஊமையாகவே இருந்து விடாதே. வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.
சூழ்நிலைகள் மாறும்போது சிலரது வார்த்தைகளும் மாறும் வாழ்க்கையும் மாறும்
விதி வரைந்த பாதையில் விடை தெரியாமல் போகிறது என் வாழ்க்கை
செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்!
விடுதலையில்லா சட்டம் வேண்டும் உன் காதல் பிடிக்குள் அகபட்டுக்கிடக்க
பொழுதுபோக்குக்காக உன்னிடம் பேசவில்லை பொழுதெல்லாம் நீ வேண்டும் என்பதால் தான் பேசுகிறேன்
வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும் ஆனால்.. ஒரே நாளில் எதுவுமே மாறாது மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்
பொறுமை வெற்றியாளர்க்கு மிகவும் அவசியமான மூலதனம்.
எல்லாமே சில காலம் தான் அது உறவாக இருந்தாலும் சரி உயிராக இருந்தாலும் சரி
பிடித்தமானவர்களை புகழாதீர்கள் விரும்புங்கள்
இயற்கையை நாம் வைச்சு செய்தால் இயற்கை திரும்ப நம்மளை வைச்சு செய் செய் என்று செய்துவிட்டு போய்விடும்
அடிக்கடி உரையாடல்கள்
இல்லை என்பதற்காக
உறவுகள் இல்லை
என்றாகிவிடாது
தன்னையும் பிறரையும் சரியாக உணரும் திறன் படைத்தவர்கள் தான் வாழ்க்கையில் மிகவும் எளிதாக முன்னேற முடியும்
முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்
வாழ்வின் சில தருணங்களையெல்லாம் மீண்டும் உருவாக்க முடியாது நடக்கும்போதே இரசித்துக் கொள்ளுங்கள்
எத்தனையோ பாரங்களை சுமந்து
அத்தனையும் சுகங்களாக மாற்றி
தன்னையே தொலைத்து
நிற்பவள் மனைவி மட்டுமே
பலரை சில காலமும் சிலரை பல காலமும் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது
எதெல்லாம் வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தோமோ
அதெல்லாம் வேண்டாம்
என்று நம்மையே சொல்ல
வைக்கும் இந்த வாழ்கை
மரணம் இல்லாமல் வாழ ஆசைதான்
மண்ணில் அல்ல உன் மனதில்
லட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்.
காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை சிலரின் மாற்றங்கள் போதும்
மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது நிம்மதியாக வாழ்வதற்கு
பாசம் வைச்சாலே
பிரச்சனை தான்
ஒன்னு தனியா
விட்டு போவாங்க இல்ல
தவிக்க விட்டு போவாங்க
ஒரு பெண்ணுக்கு நீ கொடுக்கும் மரியாதை உன் தாயின் வளர்ப்புக்கு தரப்படும் சான்று
அடிபணிந்து வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் மிகவும் பயனுள்ளது கண்ணியமானதும் கூட
படிப்பு கற்றுத்தருவதை விட
சில உறவுகளின் நடிப்பு
சிறப்பாக கற்று கொடுக்கின்றது
வாழ்க்கையை
எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்
உயர்ந்த இடத்தில் ஆளில்ல உயர்த்தி விடவும் ஆளில்லை உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு
நீ நிலவு
அழகில் மட்டுமல்ல
தொலைவிலும் நான்
உன்னை ரசிக்க முடியும்
தனிமை நாமாக தேடி சென்றால் அது அருமை தாமாக தேடி வந்தால் அது வெறுமை
வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிர், நேரம் பேசிய வார்த்தை
வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை வெற்றியோ தோல்வியோ நிற்காமல் சென்று கொண்டே இருங்கள்
கழன்றுவிழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்று நம்புகிறோம்
வாழ்க்கையில்
நம்பிக்கை இருக்கணும்
யாரையும் நம்பித்தான்
இருக்கக் கூடாது
ஒருவரின் உண்மையான காதலை
புறக்கணிக்கும் ஒவ்வொருவரும்
அவர்கள் அறியாமல் தொலைக்கின்ற
ஒரு அழகான வாழ்க்கை
ஒருத்தருக்காக இன்னொருத்தர இழக்காதீங்க அந்த ஒருத்தர் உங்க வாழ்க்கையில நிரந்தரமா இருப்பாங்கனு யாரும் உத்திரவாதம் தர முடியாது
சில சமயங்களில் போலி மனிதர்களை கூடவே வைத்திருப்பது நல்லது ஏனென்றால் உண்மையானவர்கள் யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
அறிவாளிகளுக்கு அறிவு அதிகம் ஆனால் முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்
கல்லாமையே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர்.
உனக்கானவை எதுவும் உன்னை விட்டுவிலகாது அப்படி விலகினால் அது உனக்கானவை அல்ல
நீ என்னை விட்டு விலக நினைக்கும் அந்த நொடிக்கு முன் நீ நினைத்து பார்க்க முடியாத தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்
உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது யாராலும் புரிந்து கொள்ளப்படாத அன்பு
நாம் நம்மை நம்பும் வரை வாழ்க்கை நம்முடன் இருக்கும்.
பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள் மனிதனை நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்
பல அவமானங்களை கடக்கும் ஒருவன் மனதில் ஓடும் ஒரே வாசகம் நான் ஒரு நாள் ஜெயிப்பேன்
உன் தோளில் அழகாய்
உறங்கி கொண்டிருக்கும் நம்
குழந்தைக்கு தெரியுமா
நான் தான் உன்
முதல் குழந்தை என்று
இனிமேல் எந்த உறவும் வேண்டாம் உறவுகளை நேசித்ததற்கு அவர்கள் தந்த பரிசு வலி கண்ணீர் தனிமை
திரும்பிவரும் வழியெல்லாம்
தேடுகிறேன்
உன்னைப் பார்க்கவந்தபோது
பேச நினைத்து
எடுத்துவந்த வார்த்தைகளை
என் வாழ்நாளில் என்னை அறிந்துகொண்டவர்களை விட தூக்கி எறிந்தவர்கள் தான் அதிகம் அதற்காக நான் கலங்கயதும் இல்லை கலங்க போவதும் இல்லை
காயங்களை உருவாக்க கத்திகள் தேவையில்லை புரிதலற்ற வார்த்தைகளே போதும் காயங்களை ஏற்படுத்த
என்னை தவறாக புரிந்தபின் என்னிடம் நற்செயலை எதிர்பார்க்காதே அது உன் கண்களுக்கு கிடைக்காது
ஆசைகள் மலை போல குவிந்து இருக்கிறது ஆனால் அது இருக்கும் இடமோ பாதாளத்தில்
உழைப்பை தேட முடிந்தவனுக்கு உலகம் முழுதும் வாய்ப்பு இருக்கிறது
நினைவில் கொண்ட ஆசைகளும் கனவில் கண்ட பேராசைகளும் உன்னை சேர்ந்திட தான்
உன் கன்னக்குழி அழகில்
விழுந்து கிடக்கிறேன் நான்
அனுபவம் அன்பாக கற்பிக்காது
பிறர் சொல்லும் கடுஞ்சொற்களை கொண்டு அஞ்சாதே நீ சாதிக்க பிறந்தவன் இனிய காலை வணக்கம்
தொலைந்த இடத்தில் தேடச் சொன்னார்கள் நான் இன்னும் தொலைந்த இடத்தையே தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒரு மனிதனின் நம்பிக்கை அவனது துணிச்சலை தீர்மானிக்கும்.
பேசும் பொழுதுகளன்றி
பேசாப் பொழுதுகளிலும்
பெருகும் ப்ரியம் நீ
குறை சொல்ல தான் உறவுகள் உள்ளது நிறையை பொய் என்றே சித்தரித்து விடுகிறது
நமது எண்ணங்கள் உயர்வாக இருந்தால் எந்த இலக்கையும் எளிதாய் அடையலாம்
துன்பங்களே இல்லாத வாழ்க்கை சிந்தனை இல்லாத மனிதன் போல இனிய காலை வணக்கம்
மற்றவரிடம் குறைகளை தேடுவதை விட மற்றவரிடம் நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும் இனிய காலை வணக்கம்
மனதளவில் எவராலும்
உங்களுக்கு வலி ஏற்படுத்த முடியாது
நீங்கள்தான் உங்களைச் சுற்றி நிகழும
ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக
வலியை உருவாக்குகிறீர்கள்
எத்தனை பெரிய துன்பத்தில் இருந்தும் உன்னை காக்கும் ஆயுதம் உண்மையும் பொறுமையுமே
பழகாமலே இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது சில உறவுகளின் ஏமாற்றங்கள்
சவால்கள் இல்லை என்றால் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறவில்லை என்று தான் அர்த்தம்
விரல் இடையில் நழுவிச் செல்லும் நீர்போல நமக்கே தெரியாமல் சில உறவுகள் நழுவிச் செல்கிறது
பிறரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி இனிய காலை வணக்கம்
தேவைக்கு அதிகமான நினைவுகளும் கடனும் தூக்கத்தை பறித்துக்கொள்ளும்
பயத்தின் முடிவு வாழ்க்கையின் ஆரம்பம்.
போதிக்கு ம்போது கற்றுக் கொள்ளாத பாடத்தை பாதிக்கும் போது கற்றுக்கொள்கிறோம்
எங்கேயோ தொலைந்துவிட்டது
என்னுள் இருந்த
சிரிப்பு சத்தம்
செல் செல் செல் நல் வழியில் செல் சொல் சொல் சொல் நல் வார்த்தை சொல் இனிய காலை வணக்கம்
இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால் நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது காலை வணக்கம்!
மகிழ்ச்சி என்பது சிரித்துக் கொண்டு இருப்பது அல்ல தனிமையில் இருக்கும் போதும் எந்த வித கவலையுமின்றி இருப்பது
வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்
பிறரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி இனிய காலை வணக்கம்
திட்டித்தீர்கும் தருணத்தை விட கொடியது பிடத்தவரின் மௌனம்
அனுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே இனிய காலை வணக்கம்
உண்மையாக நேசிக்கும்
நெஞ்சத்துக்கு தான் புரியும்
பிரிவால் வரும் வலி
என்னவென்று
நீங்கள் இன்னொருவரை அழிக்க நினைத்தால் உங்களை அழிக்க ஒருவர் வருவார்.
மதித்தால் மலராக இரு மிதித்தால் முள்ளாக இரு
புன்னகை எல்லாம் புகைப்படத்தில் மட்டுமே
என்னவெல்லாமோ ஆகனும்னு ஆசைப்பட்டு கடைசியில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை
நம்மிடம் இருப்பது இந்த நொடி மட்டும் தான்
உறங்கும் அவளின் விழிகளுக்குள் உறங்காது உயிர்த்திருக்கும் எனது நினைவுகள்
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கசப்பான சம்பவங்கள் தான் நமக்கு நல்ல பாடங்களையும் நல்ல அறிவுரைகளையும் வழங்கி விட்டு செல்லும்
நேற்றைய தோல்விகளுக்கான காரணங்களை நீங்கள் கண்டறியா விட்டால் நாளைய வெற்றியை நோக்கி உங்களால் ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாது
உறங்கும் இரவு இனிமையாகட்டும் விழிக்கும் விடியல் மகிழ்ச்சியானதாக அமையட்டும்
விட்டுவிடாதீர்கள் ஆரம்பம் எப்போதும் கடினமானது
சிறந்த தருணத்தில் சிறந்த பாடத்தை வழங்கும் ஒரே பயிற்றுவிப்பாளர் நேரம்!
உன் முதல் பார்வை
உன் முதல் புன்னகை
உன் முதல் ஸ்பரிசம்
உன் முதல் சப்தம்
உன் முதல் அணைப்பு
இவை எல்லாம்
மீண்டும் பூக்க செய்தது
என் பெண்மையை
விடியும் என விண்ணை நம்பு முடியும் என உன்னை நம்பு இனிய இரவு வணக்கம்
சில உறவுகள்
நம் கற்பனையில்
மட்டும் தான் சொந்தம்
நிஜத்தில் அல்ல
இது நிரந்தரம் இல்லா சுயநலம் மிகுந்த உலகம் யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் நிஜம்
கொடுக்கும் கொடையை விட கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது
எனக்கு துரோகம் இழைக்க நீ எடுக்கும் ஆயுதம் நட்பு என்றால் உன்னை வெல்ல நான் எடுக்கும் ஆயுதம் உண்மையான நட்பு
வலிகளை மறைத்து போலி
வேடமிட்டு புன்னகைக்கிறது
பல முகங்கள்
துடைக்க யாரும் இல்லா தருணங்களில் எல்லோர் முன்பு வரும் கண்ணீர் கூட துரோகி தான்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை
வேண்டுமென்றே சாத்தும் கதவை மீண்டும் தட்டாதே
மலரும் நினைவுகளுடன் உங்கள் மனம் போல தூங்க செல்லும் முன் ஒரு குட் நைட்
எப்பொழுது ஒருவர் மீது அதிகமாக கோபம் கொள்கிறாயோ அப்பொழுதே புரிந்துகொள் நீ அவர்கள் மீது உயிராய் இருக்கிறாய் என்று
நம்பிக்கை மட்டுமே அனைத்து நோய்களுக்கும் மலிவான தீர்வு.
இரவு வணக்கத்தோடு கொஞ்சம் அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் கலந்து அனுப்புகிறேன் அன்பான உள்ளத்திற்கு
விழிப்புடன் இருங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்மையானவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாததால்
இரவு என்பது வரமாக உறக்கம் என்பது நலமாக நாளைய பொழுது சுகமாக அமைய அன்பான இரவு வணக்கம்
வலி கண்ணீர்களில் தான் இருக்கிறது என்று அர்த்தமல்ல அது சில பொய்யான சிரிப்பிலும் மறைந்து இருக்கும்
தவறே செய்யாமல் வலிகளோடு வாழ வேண்டியுள்ளது சில புரிதலற்ற உறவுகளால்
காலம் சிலரின் முகத்திரைகளை கிழிக்கும்
நீ புன்னகை காட்டி
நடந்து வரும் வீதியெங்கும்
உள்ள பூக்கள் கூட
தலை கவிழ்ந்து கொள்ளும்
உன் இதழ்களோடு
போட்டியிட முடியாமல்
நிலவை பார்க்கும் போது நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன் என் நிழலை பார்க்கும் போது நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன் இனிய இரவு வணக்கம்
சில நாள் பேசாமல் இருந்து பார் பல பேர் காணாமல் போய்விடுவர்
உலகிற்கு ஒளி தரும் சூரியனே உறங்கசென்று விட்டது என் உயிருக்கு ஒளி தரும் நீ மட்டும் ஏன் விழித்திருக்கிறாய் போய் கண் உறங்கு
உரிமை உண்டு என நினைத்தாலும் நமக்கு மதிப்பு இல்லையென தெரியும் போது ஒதுங்கிவிடுவதே மேல்
நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கு அல்ல
அளவான உணவு உடலுக்கு நலம் அளவோடு பழகு உறவுக்கு நலம்
அனுபவம் அன்பாக கற்பிக்காது.
பகல் முழுவதும் இமைத்து இமைத்து களைத்து போன இமைகளுக்கும் சிறிது ஓய்வு கொடுப்போம்
வார்த்தைகளால் சிதைவது மனம் மட்டும் அல்ல அந்த உறவும் தான்
ஓய்வு இல்லாமல் உற்சாகமாக இலக்கை நோக்கி பயணிக்க இயலாது நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது இனிய இரவு வணக்கம்
வலிகளை ஏற்றுக்கொண்டால்தான் வாழ்க்கை அழகாகும்.
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள் அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆயுள் போதாது
நான் கை கோர்க்கும்
நண்பனாகவும் நீ
நான் தோள் சாயும்
கணவனாகவும் நீ
உடலுக்கு வெளியே உயிர் நின்றாலும் உயிர் வாழ முடியும் என்பதை நீ விலகியபோது தான் உணர்ந்து கொண்டேன்.
நல்ல சம நிலையுடன் இருக்கும்போது மட்டும்தான் உங்கள் புத்திசாலித்தனம் திறமை மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்
நீ தாமதமாக வந்தாலும் அது தனி அழகே நீ கோபமாக சென்றாலும் அது பேரழகே
அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் சிலர் அறிவதில்லை சொந்தகால்களின் வலிமையை
நொடி நொடியாய்
காதல் செய்யும்
என் காதல்
உன் மீது
மட்டுமே
யாருக்கு அஞ்சியும் யாரிடம் கெஞ்சியும் வாழ வேண்டாம் எல்லாரையும் மிஞ்சியே வாழ்வோம்
பொறுமையா தானே இருக்கானு ரொம்ப ஆட கூடாது என்னுடைய பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு
பையன் ஆணவமாக இருந்தால் கம்பீரன் என்று கூப்பிடும் இந்த உலகம் பெண்களை திமிர் பிடித்தவள் என்று கூப்பிடுவார்கள் அப்படி கூப்பிட்டாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம்
நிஜங்கள் எழுதும் கதையில் நினைவுகள் மட்டுமே இங்கு கதாபாத்திரங்கள்
பேசாமா போயிடு என்ற சொல்லுக்கு அவள் அகராதியில் எங்க நீ போய் தான் பாரேன் என்று பொருள்
புறக்கணிக்கிறேன்
நீ வராத
பொழுதுகளை
மருந்துக்கு பக்க விளைவுகள்
இருப்பது எவ்வளவு
உண்மையோ
அதே அளவுக்கு அதிகமாக
அன்பு வைத்தால்
அழுது தான் ஆகனும்
நான் மாறிட்டேனு
சொல்றத விட
நிறைய விஷயம் என்ன
மாத்திடுச்சினு சொல்றது
தான் நிஜம்
வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து
பொய்யாக கொஞ்சிப் பேசும்
போலி உறவுகள் நஞ்சுக்கு சமம்
பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்
துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையில் தான்
தூவப்படுகிறது
சிறிய வயதில் பாசத்தை காட்டிய உறவுகள்
வளர்ந்த பிறகு பாசம் என்ற சொல்லை
வாயில் மட்டும் பேசுகிறது
உலகத்தில் யாரை நாம்
அதிகமாக நம்புகிறோமோ
அவர்களிடம் தான்
நாம் ஏமாந்து போகிறோம்
உணர்வுகளை
வார்த்தைகளில்
விவரிப்பது அத்தனை எளிதல்ல
நேசிக்கத் தெரியாத
மனிதர்களிடம் நேசத்தை
எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
உரிமை இல்லாத
இடத்தில் எதையுமே
எதிர்பார்ப்பது
தவறு
உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே
அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்
தனித்து நிற்கும் போது
தான் தெரிகிறது
தனிமை மட்டும் தான்
நிஜம் என்று
புதைந்த பிறகே விதையும்
சிதைந்த பிறகே மனமும்
புதிய கோணம் காண்கிறது
மனம் எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வதால்
அதற்கும் வலிகள்
இல்லையென்று
நினைத்து விடாதீர்கள்
தனிமை நான்
தேர்ந்தெடுத்தது அல்ல
நான் நேசித்தவர்கள்
எனக்கு பரிசளித்தது
நம் வருத்தங்கள் உலகிற்கு
தெரியாமல் போவதை விட
நம் உலகமாயிருப்பவர்களுக்கும்
தெரியாமல் போவது
தான் பெருந்துயரம்
பல கஷ்டங்களை
கண்டு மரத்துப் போன
என் இதயத்திற்கு
தனிமையே
போதுமானதாக இருக்கின்றது
வெற்றிக்காக போராடும் போது
வீண் முயற்சி என்பார்கள்
வெற்றி பெற்ற பின்பு
விடாமுயற்சி என்பார்கள்
எத்தனை அவமானபட்டாலும்
அன்பு இல்லாத இடத்தை
நோக்கியே மனம்
குழந்தையாய் ஓடுகிறது
உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல
தோல்வியிடம்
வழி கேட்டு தான்
வந்து சேர முடியும்
வெற்றியின் வாசற்படிக்கு
அனைத்தையும் இழந்தாலும்
நம்பிக்கையை இழக்காதே
அமாவாசை என்பது
தேய்பிறையின் முடிவு தானே
ஒழிய நிலவின் முடிவல்ல
தினமும் ஓய்வில்லாமல்
உழைப்பதால் தான்
எல்லா இடத்திலும்
உயரத்தில் உள்ளது
கடிகாரம்
இதயம் வெளிப்படுத்த முடியாத வார்த்தைகள் தான் கண்ணீர்
போராடும் மனிதர்களிடம்
தோல்வியும் ஒருநாள்
தோற்றுப் போகும்
இயலும் என்று நினைத்து
விட்டால் இயலாதது
என்று எதுவும் இல்லை
ஆனந்தமாகவோ துக்கமாகவோ
இருப்பதை வேறொருவரால்
முடிவுசெய்ய இயன்றால்
அதுவல்லவா இருப்பதிலேயே
மோசமான அடிமைத்தனம்?
வாழ்வில் அற்புத மாற்றங்களை
கொண்டு வரும் யோசனைகள்
புத்தகங்களிலிருந்து வந்தவையே
பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
கடந்தவை கசப்பான
நிகழ்வுகளென்றால்
அதை மீண்டும்
ருசிக்க நினைக்காதே
வாழ்க்கையில் எது ஒன்று அதிக இன்பத்தை தருகின்றதோ அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தரும்
பயன்படாத உண்மையை
விட தேவைக்கு பயன்படும்
பொய்யே கொண்டாடப்படுகிறது
வறுமையை விட
சிறந்த பள்ளிக்கூடம்
வேற எதுவும் கிடையாது
இடைவெளி வலியை தருமென தெரிந்தும் பிடிவாதமாய் அனுபவித்து இருக்கிறோம் இருவரும்
கொஞ்சம் அனுசரித்து
வாழ்வது நல்ல வாழ்க்கை
எல்லாவற்றையும் அனுசரித்து
வாழ்வது நரக வாழ்க்கை
காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை
உன் விழியீர்ப்பு விசைக்கு
விளக்கம் தர உன்னால்
ஈர்க்கப்பட்ட என்னை தவிர
வேறு யாரால் முடியும்
செலவழிக்க சில்லறை
கூட இல்லாத போது
தான் தெரியும் வீணாக
நாம் செலவழித்த
பணத்தின் அருமை
அன்பை ஆயுதமாக
ஏந்தியவனுக்கு
தோல்விகள் இல்லை
உன் வயதைக் காட்டிலும்
உன் குணம் தான்
மற்றவர்களுக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும்
கோபப்பட வேண்டிய
இடத்திலும் கதறி அழ
வேண்டிய இடத்திலும்
புன்னகையுடன் கடந்து
செல்வது தான் பக்குவம்
What's Your Reaction?






