கர்ப்ப காலத்தில் இந்த உணவைச் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக வளரும்
உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க விரும்பினால், இன்றிலிருந்து இந்த ஒரு உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை நல்ல வளர்ச்சியும் புத்திசாலித்தனமாகப் பிறக்கும்.

ஒரு தாயாக மாறும் தருனம் என்பது எந்தவொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் கடினமான ஆனால் அழகான பயணம் என்று கூறப்படுகிறது. மேலும் வாழ்க்கையின் இந்த மிகப்பெரிய பொறுப்பை அவள் மிகவும் பொறுமையாகவும் நன்றாகவும் நிறைவேற்ற வேண்டும். எனவே குழந்தைக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை உருவாக்க அவள் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறாள். இந்த கட்டுரையில் வயிற்றில் வளரும் குழந்தையை அழகாகவும் புத்திசாலியாகவும் வளர விரும்பினால், இந்த உணவை சேர்த்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் பற்றி கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். கர்ப்ப காலத்தில் சில உணவுகளை சாப்பிடுவது உங்கள் குழந்தையின் மன வளர்ச்சிக்கு நல்ல முறையில் உதவுகிறது.
கொழுப்பு நிறைந்த மீன்
கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு எண்ணெய் (கொழுப்பு) மீன்களை சாப்பிடுவது சிறந்தது. கொழுப்பு நிறைந்த மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். மனித மூளையில் 60% கொழுப்பு மற்றும் 20% DHA மற்றும் ARA இருப்பதால் இந்த கொழுப்புகள் குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு முக்கியம். இந்த உணவுகள் மூளை திசுக்களை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், மரபணு வெளிப்பாட்டை உருவாக்கவும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகின்றன.
முட்டை
முட்டை பொதுவாக இளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை தரக்கூடியது. முட்டைகளில் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கோலின், வைட்டமின் பி12 மற்றும் புரதம் ஆகியவை இருக்கின்றது. கோலின் சாதாரண மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்.
காய்கறிகள்
கர்ப்பிணி பெண்கள் அதிகம் கீரைகள் எடுத்துக்கொள்வது குழந்தகள் முளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அவை இரும்பு மற்றும் ஃபோலேட்டின் சிறந்த மூலமாகும். கற்றல் மற்றும் நினைவாற்றலுக்குப் பொறுப்பான மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகேம்பஸின் வளர்ச்சியில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
What's Your Reaction?






