உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் 5 திட்டங்கள்..!
ஒவ்வொருவரும் அதிகப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக எல்லோராலும் அனைத்து நேரங்களிலும் ஊதிய உயர்வைக் கேட்க முடிவதில்லை. நாளுக்கு நாள் நமது தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் வருமானம் மாறாமல் அப்படியே இருக்கிறது.
1. பங்கு சந்தை :
இருப்பினும் உங்கள் வருமானத்தை உயர்த்த வழிகள் இருக்கிறது. எனவே இந்த 5 வழிகளைப் பின்பற்றி உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள்:
பங்குச்சந்தை உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான விரைவான வழிகளில் ஒன்றாகும். நீங்கள் பங்குகளை ஒரு தரகரிடம், ஒரு நிதி, திட்டமிடும் ஆலோசகரிடம் அல்லது இணையதளத்தில் வாங்கலாம். உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் உங்கள் பங்குகளை எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். பங்குச்சந்தையைப் பொறுத்த வரையில் நீங்கள் மிக அதிகப் பணத்தைச் சம்பாதிக்கலாம். அதே சமயம் மிக அதிகப் பணத்தை இழக்கவும் நேரிடலாம். ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்வதற்குப் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் பங்குகளை வாங்குவதற்கு முன்பு ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் அது எவ்வளவு இலாபகரமானது என்பதைக் கண்டறிய ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
2. நிலையான வருமானத்தை ஈட்டும் பாதுகாப்புப் பத்திரங்களில் முதலீடு செய்தல்:

சில நிறுவனங்களின் நிலையான வருமானம் ஈட்டும் பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்தல் வட்டி கூட்டுதல் சட்டத்தின்படி நீண்ட காலத்திற்கு உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, PNB வீட்டுக்கடன் நிதி நிறுவனத்தில் உங்கள் பணம் 120 மாத கால வரையறையில் 10.14 சதவீதம் வட்டியைப் பெறுகிறது. நீங்கள் உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் உள்ளார்ந்த வழிகள் இதில் மறைந்திருக்கின்றன என்பது இதன் பொருளாகும்.
3. பணத்தைக் கடனாகக் கொடுத்தல் :

மூன்றாம் தரப்பினருக்கு உயர்ந்த வட்டி விகிதத்தில் பணத்தைக் கடனாகக் கொடுத்தல், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க மற்றொரு விரைவான வழியாகும். பணத்தைக் கடனாகக் கொடுப்பதன் மூலம் ஒரு குறுகிய கால வரையறைக்குள் அதாவது 4 முதல் 5 வருடங்களுக்குள் உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கலாம். இன்றைய நாட்களில் மக்களில் பலர் நெருக்கடி நிலை தேவைகளை எதிர்கொள்ள உயர்ந்த வட்டி விகிதத்தில் பணத்தைக் கடனாகப் பெற தயாராக இருக்கிறார்கள்.
4. சொத்து மனை வாங்கி விற்றல் :

சொத்து மனை வாங்கி விற்கும் தொழில் சுமார் 5 வருடங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் மற்றொரு முதலீட்டுத் தேர்வாகும். மற்ற முதலீட்டுத் தேர்வுகளை விட வீட்டுமனை வாங்கி விற்கும் தொழிலில் பணப்புழக்கம் நிலையானது மற்றும் முன்கூட்டிக் கணிக்கக் கூடியது. பண மதிப்பிறக்கத்திற்குப் பிறகு வீட்டுமனை வாங்கி விற்கும் தொழில் சிறிது தாழ்ந்துள்ளது. ஆனால் இந்தத் தொழிற்பிரிவு குறுகிய கால வரையறைக்குள் அதன் ஆற்றலை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. சிறு தொழில்:

ஒரு இலாபகரமான சிறு தொழிலில் கூட்டாளியாக ஆவது உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க ஒரு சிறந்த வழியாகும். தொழில் கூட்டாளிகள் கூட்டாகவும் மற்றும் தனித்தனியாகவும் தொழிலில் இணைந்துள்ள இதரக் கூட்டாளிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகின்றனர். எனவே இந்தத் தேர்வு முழுவதுமாக அபாயகரமான ஒன்றாகும். ஒரு தொழிலில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் அந்த நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நிறுவனத்தின் லாபம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்தத் தொழிலில் நீங்கள் லாபம் ஈட்டும்போது நீங்கள் முதலீடு செய்த பணத்தின் மீது வருமானத்தைச் சம்பாதிக்கலாம்.
What's Your Reaction?






