தங்கத்தை வைத்து கடன் வாங்க வேண்டுமா? பர்சனல் லோன் வாங்க வேண்டுமா? எது பெஸ்ட் சாய்ஸ்..!!

கடன் தேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான ஒரு விஷயமாக மாறி வருகிறது

Feb 27, 2025 - 14:39
 0  1
தங்கத்தை வைத்து கடன் வாங்க வேண்டுமா? பர்சனல் லோன் வாங்க வேண்டுமா? எது பெஸ்ட் சாய்ஸ்..!!

கடன் வாங்குவதற்கு தேவை உள்ளவர்கள் அதிகளவில் தனிநபர் கடனும் வாங்கி வருகின்றனர். அதுவே அதிக தேவை இல்லாதவர்கள் தங்களது சொத்துக்களை வைத்து தேவைக்கு தகுந்தார்போல் கடன் வாங்குகின்றனர்.அந்த வகையில், இரண்டு வகையான கடன்கள் தங்கக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் ஒப்பீடு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தங்கக் கடன் பாதுகாப்பான வகையிலும், தனிநபர் கடன் பாதுகாப்பற்ற வகையிலும் உள்ளது.

தனிநபர் கடன்கள் மற்றும் தங்கக் கடன்கள் இரண்டு விருப்பங்களாகும். இங்கு தனிநபர் கடனுக்கு பிணை தேவையில்லை மற்றும் அதே நேரத்தில் கிரெடிட் ஸ்கோர் முக்கியமானதாகிறது. அதே சமயம், தங்கக் கடனில் தங்கம் அடகு வைக்கப்படுவதால் கிரெடிட் ஸ்கோர் முக்கியமில்லை.

தனிநபர் கடன்: இந்தக் கடன்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக எடுக்கப்படுகின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், உங்கள் வருமான நிலைத்தன்மை மற்றும் தற்போதைய நிதிக் கடமைகளைக் கருத்தில் கொண்டு நிதி நிறுவனங்கள் அத்தகைய கடன்களை வழங்கும்.

 தனிநபர் கடன் - நன்மைகள்: முக்கிய நன்மை என்னவென்றால், பிணையம் தேவையில்லை. அவை பாதுகாப்பற்ற கடன்கள் என்பதால், கடனைப் பெற சொத்துக்கள் எதுவும் அடகு வைக்க வேண்டியதில்லை. அதேபோல், அதிக கடன் வரம்பு அடுத்த சிறந்த விஷயம். கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானத்தைப் பொறுத்து, அதிக கடன் வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய கடன்கள் திருமணச் செலவுகள், கல்வி, மருத்துவ அவசரம் போன்ற எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.

தனிநபர் கடன் - தீமைகள்: பாதுகாப்பற்ற கடனுக்கு பிணை இல்லை என்பதால், தங்கக் கடன் போன்ற பாதுகாப்பான கடன்களுடன் ஒப்பிடும்போது வட்டி விகிதம் அதிகம் ஆகும். கடன் ஒப்புதல் மற்றும் வட்டி விகிதங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்தது. இதனால், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்

தங்கக் கடன்கள்: இவை தங்கத்தால் பாதுகாக்கப்பட்ட கடன்கள். அடமானத்தின் போது மதிப்புக்கு நெருக்கமான தொகை இங்கே கடனாகப் பெறப்படுகிறது.

தங்கக் கடன் - நன்மைகள்: தங்கத்தின் நன்மை என்னவென்றால், பணம் விரைவாக பெறப்படுகிறது. அதேபோல், குறைவான ஆவணங்கள் மற்றொரு நன்மை ஆகும். பாதுகாப்பான கடன் என்பதால், குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களும் கடன் பெறலாம். அதேபோல், தனிநபர் கடன்களை விட வட்டி விகிதங்கள் குறைவு ஆகும்.

தங்கக் கடன் - தீமைகள்: உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தால் கடனில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் வட்டி பெருகும் அபாயம் மற்றும் சொத்தாகக் கொடுக்கப்பட்ட தங்கம் ஏலம் விடப்படலாம். தங்கத்தின் சந்தை விலையை விட கடன் தொகை குறைவாக உள்ளது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0