எலுமிச்சை (Lemon) சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்
எலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். இது உலகம் முழுவதும்பொதுவாக பயன்படுகிறது. மா, வாழை ஆகியவற்றிக்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.
1. எலுமிச்சை ;

எலுமிச்சையின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனோஷியா. இது உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் பயிரிடப்படுகிறது. தமிழ் நாடு, ஆந்திர, மத்திய பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், டெல்லி, ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யபடுகிறது.
எலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். இது உலகம் முழுவதும்பொதுவாக பயன்படுகிறது. மா, வாழை ஆகியவற்றிக்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.
2. பயிரிடும் முறை;

- டிசம்பர் – பிப்ரவரி ஜூன் செப்டம்பர் நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்
- சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் பி.கே.எம். -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், பிரமாலினி ராஸ்ராஜ், வி.ஆர்.எம் 1 ஆகிய இரங்கள் ஆகும்.
- நல்ல வடிகால் வசதயுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களிலும் களிமண் இல்லாத மணல் பாங்கான நிலங்களிலும் எழும்ச்சை செழிப்பாக வளரும்.
- நிலத்தை நன்கு உழுது சமன்படுத்தி கொள்ள வேண்டும் அதில் 20 அடி இடைவெளியில் 3 அடி அழம் மற்றும் 3 அடி அகலம் இருக்கும்படி குழிகள் எடுக்க வேண்டும் . ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிரப்பி, ஒரு வாரம் ஆற போட வேண்டும்.
- பதியன் செடிகளை தான் நடவு செய்ய வேண்டும் ஒரு ஏக்கருக்கு 1௦௦ பதியன் செடிகள் தேவைப்படும்.
- 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை குழியின் மையத்தில் ஒரு அடி அழத்தில் நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க ஒவ்வெரு செடியின் அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.
- நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணிர் விட வேண்டும், அதற்கு பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தல் போதுமானது.
- எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு ஆதி இடைவெளி விட்டு அரையடி விட்டதில் வட்டப்பாத்தி எடுத்து 2 கிலோ ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
- செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பாதுகாக்க வேண்டும். களையின் வளர்ச்சியை பொறுத்து களை எடுக்க வேண்டும்.
- நட்ட மூன்றாவது ஆண்டிலிருந்து காய்கள் அறுவடைக்கு வந்து விடும். திரண்ட கரும்பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் பொது அறுவடை செய்ய வேண்டும்.
3. பயன்கள்;

- தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.
- ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடி பட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.
- எலுமிச்சை பழசாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல்,வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
- எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.
- தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவதன் முலம் உடல் எடை குறையும்.
What's Your Reaction?






