புத்திசாலி குரங்கு
தமிழ் கதைகள்

அது ஒரு பெரிய மலை பகுதி. அங்க சின்னதா எப்பவும் விழற ஒரு நீர்வீழ்ச்சி இருந்துச்சி. அங்க இருக்கிற மரங்கள்ல நிறைய குரங்குகளும் இருந்துச்சி.
ஒரு நரி அந்த மலை அடிவாரத்துக்கு அடிக்கடி வரும். அதுக்கு குரங்கு கறி சாப்புடணும்னு ஆசை. ஆனா அந்த நரியால ஒரு குரங்க கூட சுலபமா பிடிக்க முடியல. தினம் ஏமாந்து திரும்பிடும்.
பனி காலம் வந்தது.
திரும்பவும் ஒரு நாள் அந்த நரி அங்க வந்துச்சி. எப்படியாவது இன்னக்கி ஒரு குரங்க பிடிச்சிடனும்னு அங்கேயே காத்து இருந்துச்சி.
அங்க இருந்த குரங்குக எல்லாம் மரத்துக்கு மரம் தாவி விளையாடி-க்கிட்டு இருந்துச்சி.
பனி மூட்டமா இருந்ததால், திடீர்னு ஒரு குரங்கு பிடி தவறி விழுந்திடுச்சி . உடனே அந்த நரி இந்த குரங்க பிடிக்க வேகமா பக்கத்துல போச்சி. அந்த குரங்கு பதட்டத்தோட
'இரு, இரு, என்ன பண்ண போற' ன்னு கேட்டுச்சி. 'நான் உன்ன சாப்பிட போறேன்' நரி சொல்லிச்சி. 'குரங்க யாராவது சாப்பிடுவாங்களர் குரங்கு கேட்டுச்சி.
'எனக்கு புத்தி மந்தமாம். குரங்கோட நுரையீரல் சாப்பிட்டா நான் புத்தி-சாலி ஆயிடு - வேன்னு என் நண்பர்கள் சொன்னாங்க.
'நுரையீரலா...'ன்னு குரங்கு யோசிச்சது.
அப்ப கொஞ்ச நேரம் இரு' -குரங்கு சொல்லிச்சி.
'எதுக்கு - நரி கேட்டுச்சி
உடனே குரங்கு 'நான் காலையில குளிச்சிட்டு, என்னோட நுரையீரல் துவைச்சி அந்த மலைக்கு மேல காய போட்டிருக்கேன்' ன்னு புத்திசாலி தனமா சொல்லிச்சு.
அப்ப நரி அந்த மலைய பாத்துக்கிட்டே, 'நான் போய் எடுத்துக் கட்டுமா?'-ன்னு கேட்டுச்சி.
உனக்கு இடம் தெரியாது. உன்னால் அந்த மலை ஏறவும் முடியாது. நான் போய் எடுத்துட்டு வர்றேன்' - குரங்கு சொல்லிச்சு.
'நீ ஏமாத்திட்டு ஓடிறுவயே' - நரி கோபமா சொல்லிச்சு.
'சத்தியமா நான் ஓட மாட்டேன். சீக்கிரம் வந்துடுவேன்'-குரங்கு நம்புற மாதிரி முகத்த வச்சிக்கிட்டு சொல்லிச்சு.
'சரி நான் இங்கேயே இருக்கேன். நீ போய் எடுத்துட்டு வா. ஏமாத்துன, நான் நாளைக்கி வந்து உன்ன சாப்டுறுவேன்'- நரி அழுத்தமா சொல்லிச்சு.
'கவலை படாத. இங்கயே இரு. இப்ப வந்துர்றேன்' -சொல்லிட்டு குரங்கு மரங்கள் மேல ஏறி ஓடிடுச்சி.
What's Your Reaction?






