Home Made Briyani Masala Recipie

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பிரியாணி. நம் இல்லத்தில் உள்ளவர்களை மகிழ்விக்க இந்த பிரியாணி மசாலா தூள் தயாரிக்கும் வித்தையை நம் கைவசம் வைத்துக் கொள்ளலாம்... உங்களுக்காக இதோ சுவையான பிரியாணி மசாலா செய்முறை பற்றி இக்கட்டுரையில் காண்போம்

Jan 31, 2025 - 15:07
 0  12

1. தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
  • காய்ந்த மிளகாய் - 3
  • பிரியாணி இலை - 7
  • தனியா - 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஷா ஜீரா - 1 டீஸ்பூன்
  • ஜாவித்ரி - 3
  • இலவங்கப்பட்டை - 2 அங்குலம் அளவு
  • ஜாதிக்காய் - 1
  • கிராம்பு - 1 டீஸ்பூன்
  • கருப்பு ஏலக்காய் - 3
  • நட்சத்திர சோம்பு - 3
  • ஏலக்காய் - 10
  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்

2. செய்முறை

செய்முறை

மசாலாக்களை வறுப்பதற்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். இதில் கூறப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி மசாலாக்களை தனித்தனியாக வறுக்கவும்.

  • முதலில் ஒரு அடி கனமான கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் பிரியாணி இலைகளை சேர்த்து மொறுகலாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
  • அடுத்ததாக தனியா, சீரகம் மற்றும் ஷா ஜீரா சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இதையும் தனியாக வைக்கவும்.
  • இப்போது ஜாவித்திரி, பட்டை, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், சோம்பு மிளகு மற்றும் நட்சத்திர சோம்பு சேர்த்து வறுக்கவும்.
  • வறுத்த மசாலாக்கள் அனைத்தும் நன்கு ஆறும் வரை காத்திருக்கவும்.
    • அதன்பின் இவற்றை எல்லாம் ஒரு மிக்சர் ஜாருக்கு மாற்றி நல்ல பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து ஆறவிடவும்.
    • இந்த மசாலாவை காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    இந்த மசாலாவை கொண்டு சைவம் மற்றும் அசைவ பிரியாணி வகைகளை செய்யலாம். இந்த அருமையான பாய் வீட்டு சீக்ரெட் பிரியாணி மசாலா பொடியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.