நீதிமன்ற படியேறிய அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள்.. காரணம் என்ன?
ஆராத்யா பச்சன், ஆன்லைன் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் கூகுள், பாலிவுட் டைம்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், அந்த தம்பதிக்கு 13 வயதில் ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
பாலிவுட்டின் முக்கிய நட்சத்திர குடும்பத்தின் வாரிசான ஆராத்யா மீதான மீடியா வெளிச்சம் என்பது அவர் பிறந்தது முதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் ஊடகங்களில் தன்னை பற்றியும் தனது உடல்நிலை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதனை நீக்க கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுவுக்கு பதில் அளிக்க, கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்களுக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்
முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ‘ஆராத்யா பச்சன் உடல்நிலை மோசமாக உள்ளது’ போன்ற போலி வீடியோக்களை நீக்கியது. மேலும் ஆராத்யாவின் உடல்நிலை தொடர்பான வக்கிரமான பொய் பரப்பும் தகவல்களை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்க
What's Your Reaction?






