Tamil Nadu Budget 2025 : தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
1. மடிக்கணினி - ரூ.2000 கோடி ஒதுக்கீடு

அடுத்த 2 ஆண்டுகளில் 20,000 கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு என பட்ஜெட்டில் அறிவிப்பு
2. பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைவு
ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
3. அரசு வேலை: 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கை
மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆசிரியர் தேர்வு வாரியம். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந் அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது
4. பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு ரூ.2000 உதவித்தொகை
மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில், குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
5. ஊட்டி, கொடைக்கானலில் ரோப்வே
மாமல்லபுரம், உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அப்பகுதிகளில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் கொண்டும் ரோப்வே (Ropeway) எனும் உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
6. இருசக்கர வாகனம் வாங்க மானியம்
இணைய செவை தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
7. டீசல் பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற நடவடிக்கை
காற்று மாசுபாட்டையும் கார்பன் தடங்களையும் குறைத்திடும் நோக்கில், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின்
700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் (CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைப்பு செய்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியைக் கொண்டு 70 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
8. ஊட்டியில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா
ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
9. சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தடம்
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9744 கோடியும்,
. பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
10. எவரெஸ்ட் சிகரம் ஏறும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை
இந்தியாவின் மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் ஏராளமான இயற்கை எழில் கொஞ்சம் இடங்கள் மலையேற்ற விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்றதாக உள்ளன. பயிற்சிபெற்ற மலையேற்ற வீரர்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் பயணம் செய்து சிகரம் தொட விழைகின்றனர். எனவே, பல்வேறு மலையேற்ற வீரர்களின் பெருங்கனவான, உலகில் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர் /வீராங்கனைகளுக்கு 10 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
11. உடற்கல்வி பாடத்தில் செஸ் விளையாட்டு
உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது.இதுவரை இரண்டு உலக சாம்பியன்கள் மற்றும் 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணிலிருந்து உருவாகியுள்ளனர். இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டும், மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டை ஊக்குவித்து பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையிலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினைச் சேர்த்திடும் விதமாக, உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும். - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
12. ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடுபழம்பெரும் ஒலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்.அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
13. மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
What's Your Reaction?






