மார்ச் மாதத்தின் மத்தியில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்!
நாசா வெளியிட்டுள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலன் மார்ச் 12 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோரை மார்ச் மாதத்தின் மத்தியில் பூமிக்கு திரும்பி அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது
நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலன் மார்ச் 12 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளனர் என்றும், இந்த விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளனர் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த விண்கலம் மார்ச் இறுதியில் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மார்ச் மாதத்தின் மத்தியிலேயே விண்ணில் ஏவப்படுவதால், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா, பட்ச் ஆகியோர் கடைசி திட்டத்தின் படி 2 வாரங்கள் முன்னதாக பூமி திரும்ப உள்ளனர்.
What's Your Reaction?






