Online Course : மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ஆன்லைன் வழியாக கற்பிக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் - இலவசமாக பெற லிங்க இதோ

Harvard University Managing Happiness Course : வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? நமக்கு மகிழ்ச்சி என்று நாம் எதை எண்ணிக் கொண்டு இருக்கிறோம்? இதுபோன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு தோன்றி இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி பற்றிய ஆன்லைன் படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. உலக முழுவதும் இருந்து இந்த ஆன்லைன் படிப்பில் இலவசமாக சேர்ந்து படிக்கலாம். சமூக அறிவியல், உளவியல், நரம்பியல் மற்றும் தத்துவவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வில் உறுதிசெய்யப்பட்ட முறையில் கற்பிக்கப்படுகிறது.

Jan 17, 2025 - 15:07
Jan 17, 2025 - 15:07
 0  3
Online Course : மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ஆன்லைன் வழியாக கற்பிக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் - இலவசமாக பெற லிங்க இதோ

Harvard University Managing Happiness Online Course : வாழ்க்கையில் மகிழ்ச்சியின் முக்கியதுவம் என்ன? மகிழ்ச்சி என்று நாம் எதை நினைக்கிறோம்? என பல கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆன்லைன் வழியில் கற்பிக்கிறது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் US ஐவி லீக் கல்லூரி. மகிழ்ச்சியான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் Managing Happiness என்ற தலைப்பில் அறிவியல் மூலம் இந்த படிப்பு edX ஆன்லைன் வழியில் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் கிடைக்கும் இந்த கல்வியில் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம்.

மகிழ்ச்சிக்கான ஆன்லைன் படிப்பு
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம்முடைய மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறோம். இதற்கு உங்களுக்கு சரியான வழிமுறை அறிவியல் வழியில் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா! அதற்குதான் இந்த புதிய கல்வியை அறிமுகம் செய்துள்ளது ஹார்வர்ட் பல்கலைக்கழகம். வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்தவும், மன வலிமையை அதிகரிக்கவும் இந்த படிப்பு மூலம் கற்பிக்கப்படுகிறது.

சமூக அறிவியல், உளவியல், நரம்பியல் மற்றும் தத்துவவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வில் உறுதிசெய்யப்பட்ட தரவுகள் அடிப்படையில், வாழ்க்கையில் மகிழ்ச்சியின் முக்கியதுவம் என்ன என்பதை இந்த படிப்பில் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் முழுமை பெற்ற வாழ்க்கையை நீண்ட கால மகிழ்ச்சியுடன் வாழ தேவையான நுணுக்கங்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பலன்கள் என்ன?

  • மகிழ்ச்சி என்றால் என்ன? தினசரி வாழ்க்கையில் மகிழ்ச்சியின் தேவை.
  • மரப்பியல், சமூகம் மற்றும் பொருளாதார காரணிகள் எப்படி மகிழ்ச்சியை மாற்றுக்கின்றன.
  • உடலின் உணர்ச்சிகளை அறிவியல் மூலம் மேம்படுத்துவது
  • தனிப்பட்ட விரும்பங்களுடன் மகிழ்ச்சியை எப்படி ஒன்றிணைப்பது
  • வேலை மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிர்வகிக்க தேவையான நுணுக்கங்கள்

6 வாரங்களுக்கு மட்டும்தான்
ஆன்லைன் வழியாக 6 வாரங்களுக்கு இந்த படிப்பு வழங்கப்படுகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் Arthur Brooks என்பவரால் இந்த படிப்பு நடத்தப்படுகிறது. ஒரு வாரத்திற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு மட்டும் ஆங்கிலத்தில் நடைபெறும். இருப்பினும் பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 முதல் தொடங்கிய இந்த படிப்பு மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும்.


விண்ணப்பிப்பது எப்படி?
இந்த படிப்பு இரண்டு வகையில் வழங்கப்படுகிறது. முழுமையாக நோட்ஸ் மற்றும் சான்றிதழ்களுடன் கூடிய படிப்பிற்கு 219 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.18,199 செலுத்த வேண்டும். சான்றிதழ் பெறாமல் குறிப்பிட்ட நோட்ஸ்கள் மட்டும் கொண்டு இலவசமாகவும் படிக்கலாம். https://www.edx.org/learn/happiness/harvard-university-managing-happiness என்ற இணைப்பில் இலவசமாக பிப்ரவரி 25 வரை பெறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow