முருங்கை கீரை வச்சு சத்தான முருங்கைக்கீரை சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
How to prepare Murungai Keerai chutney Recipe in tamil

முருங்கை கீரை வச்சு சத்தான முருங்கைக்கீரை சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, வேர்கடலை சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் வித்தியாசமா முருங்கைக்கீரை வச்சு ஒரு சட்னி ரெசிபி பார்க்க போறோம். முருங்கைக் கீரையில் நிறைய நிறைய சத்துக்கள் இருக்கு உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு உணவு அப்படின்னா அதை முருங்கைக்கீரை அப்படின்னு சொல்லலாம். இந்த முருங்கைக்கீரை வச்சு பொரியல் முருங்கைக்கீரை கூட்டு முருங்கைக்கீரை வடைன்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா முருங்கைக்கீரை வச்சு ஒரு தடவை இந்த மாதிரி சட்னி செஞ்சீங்கன்னா சட்னி அவ்ளோ டேஸ்டா இருக்கும். -விளம்பரம்- முருங்கைக்கீரை சாப்பிடாதவங்க கூட இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவாங்க. உடம்புல ரத்தம் கம்மியா இருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கு அப்படின்னா யோசிக்காம வாரத்துல நாலு தடவை முருங்கைக்கீரை சேர்த்துக்கலாம் அப்படி சேர்க்கும் போது எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிப்பிஸ் செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை சட்னி செஞ்சு பாருங்க இட்லி, தோசை எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். ரசம் சாதமிச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா கூட இத வச்சு சாப்பிடலாம். சுட சுட சாதத்தில் கூட பிசஞ்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். முருங்கைக்கீரை சட்னி எப்படி இருக்கும்னு யோசிக்க வேண்டாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு முருங்கைக்கீரை சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும். விதவிதமான நிறைய சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இது ஒரு ஆரோக்கியமான சட்னி கண்டிப்பா முருங்கை கீரை கிடைக்கும்போது இத செஞ்சு பாருங்க ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை இருந்தா கூட போதும் சூப்பரா இந்த சட்னி செஞ்சுடலாம். இப்ப வாங்க இந்த ருசியான முருங்கைக்கீரை சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கைப்பிடி முருங்கை கீரை
2 தக்காளி
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
1 டீஸ்பூன் சீரகம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
4 பச்சை மிளகாய்
1 துண்டு புளி
2 காய்ந்த மிளகாய்
2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
செய்முறை
ஒரு கடாயில் சீரகம் உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். ▢ வேர்க்கடலையும் வறுத்து தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும். ▢ கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தக்காளி தேங்காய் துருவல் புளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். ▢ முருங்கைக்கீரை தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கி ஆற வைத்து அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுக்கவும். ▢ கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் சேர்த்து விட்டால் சுவையான முருங்கை கீரை சட்னி தயார்.
What's Your Reaction?






