வீட்டில் இருந்தவாறு பெண்களும் சம்பாதிக்க முடியும் - Women business ideas in tamil
How to Earn money for Women without any investment

Women in Business: வீட்டில் இருந்தவாறு பெண்களும் சம்பாதிக்க முடியும்!
ஒரு தொழிலைத் தொடங்குவது பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அடைவதற்கும், மிகவும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.
பெண்களின் கையில் வருமானம் இருந்தால் குடும்பத்தில் எந்த சூழலையும் அசால்டாக எதிர்கொள்வார்கள். திருமணத்திற்கு முன்னதாக தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு சம்பாதித்தாலும் திருமணத்திற்கு பின்னதாக அவர்களது வாழ்க்கையில் முற்றிலும் மாறிவிட்டது. 50 சதவீத பெண்கள் திருமணத்திற்கு பின்னதாக வீட்டில் இருந்து பணியாற்றக்கூடிய நிலை உள்ளதா? என்ற தேடலில் தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஏதாவது ஒரு வணிகத்தைத் தொடங்கலாம் என்ற யோசனையிலும் இருப்பார்கள். இவ்வாறு ஒரு தொழிலைத் தொடங்குவது பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அடைவதற்கும், மிகவும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகவும் உள்ளது. இதோ இதுபோன்ற பெண்களுக்காகவே சிறந்த வணிக யோசனைகளை இங்கே பகிர்கிறோம்.
பெண்களுக்கான வணிக யோசனைகள்:
· பெண்கள் பணிக்குச் சென்றால் அந்த வேலையைத் தவிர மற்ற வேலைகளைப் பார்க்க முடியாது. ஆனால் வீட்டில் இருந்தால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, அவர்களின் வருமானத்திற்கு சில தொழில்களையும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே அமையும்.
· பெண்களில் பலர் தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிக ஆசைப்படுவார்கள். எனவே வீட்டில் அழகுநிலையங்கள் தொடங்கலாம். ஆன்லைன் வாயிலாக பல அழகுசாதனக் குறிப்புகளை அப்லோடு செய்வதால் அதன் மூலமும் வருமானத்தைப் பெற முடியும்.
· பெண்களுக்கான சுய தொழிலில் அடுத்தப்படியாக நிகழ்ச்சிகளை கையாளுதல் அதாவது Event management தொழிலைத் தொடங்கலாம். வீட்டில் இருந்தபடியே திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் போன்றவற்றிற்கு சாப்பாடு முதல் மண்டபம் வரை ஏற்பாடு செய்து தரக்கூடிய பணிகளை மேற்கொள்ளலாம். இது வீட்டில் இருந்தப்படியே சம்பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
· வீட்டில் தயாரிக்கப்பட்ட பருப்பு பொடி, இட்லி பொடி, மசால் பொடி, வடகம், வத்தல் போன்றவற்றைத் தயாரித்து ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் விற்பனை செய்யலாம். கையில் கொஞ்சம் அதிகமாக பணம் இருந்தால் பெரிய அளவில் தொழிலாளர்களை வைத்து நீங்கள் உங்களது வணிகத்தைத் தொடங்கலாம்.
· பெண்களில் பலருக்கு தையில் நிச்சயமாக தெரிந்திருக்கும். இன்றைய பெண்கள் விரும்புவது போன்று ஆரி ஓர்க் மற்றும் விதமான மாடல்கள் ப்ளவுஸ் மற்றும் சுடிதார்களை தைக்கும் சிறு நிறுவனம் அமைக்கலாம்.
· பெண்களுக்கு எழுதும் திறன் இருந்தால் பரீலான்ஸராகவும் உங்களது பணியை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். சோசியல் மீடியாக்களில் மின் புத்தகங்கள் கூட எழுதலாம்.
· புகைப்படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ள பெண்களாக இருந்தால், குடும்ப புகைப்படக் கலைஞராக மாறலாம். ஆண் புகைப்பட கலைஞர்களை விட இன்றைக்கு திருமணம் உள்ள சுப நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுப்பதற்கு பெண் புகைப்பட கலைஞர்களைத் தான் விரும்புகிறார்கள். ஒருவேளை வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால், எடுக்கக்கூடிய புகைப்படங்களை வீட்டில் இருந்தே எடிட் செய்து கொடுக்கவும்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பு:
தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் எளிதாக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணமாக தோசை மாவு, இட்லி பொடி, மசாலா பொடி மற்றும் ரெடிமேட் மிக்ஸ், லஞ்ச் பாக்ஸ் என்ற வீட்டு உணவு தயாரித்து விற்பனை செய்யலாம். குறைந்த முதலீடு, நேரம் மற்றும் உழைப்பின் மூலம் தினசரி வருமானம் பெற இது சிறந்தது. தொடர் வாடிக்கையாளர்களை பெற்ற பின்பு அதிக வருமானம் ஈட்ட முடியும்.
ஆன்மிகம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு:
உங்கள் பகுதியில் உள்ள பெண்கள் அல்லது உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து விளக்கு திரி, ஊதுவர்த்தி, சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் குங்குமம் போன்ற ஆன்மிகம் சார்ந்த பொருட்களை நீங்கள் தயார் செய்து விற்பனை செய்யலாம். இது நிரந்தர வருமானம் கிடைக்க சிறந்த வழி. இப்பொருட்களுக்கு என்றும் விலை குறைவு ஏற்படாது. தவிர, இப்பொருட்கள் தினசரி பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை எப்போதும் இருக்கும். அதேபோல் இத்தொழில் மூலம் உங்களுடன் சேர்ந்து உங்களைச் சார்ந்த அல்லது உங்களுடன் இணைந்து வேலை செய்பவர்களுக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்கும். மேலும், இவற்றின் முதலீடும் குறைவாகவே இருக்கும்
.
இதர பொருட்கள்:
மெழுகுவர்த்தி, மேசை மற்றும் ஷோகேஸ் அழகுப் பொருட்கள், குளியல் மற்றும் துணி சலவை செய்யும் சோப், பவுடர்கள், வீட்டை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள், கால்மிதி, துடைப்பம், பேனா, வளையல், புத்தகம் மற்றும் பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டுகள், சருமத்துக்குப் பயன்படுத்தும் லோஷன், எண்ணெய், பவுடர், கிரீம்கள், ஜெல் மற்றும் கூந்தலுக்குப் பயன்படுத்தும் டை, ஷாம்பு மற்றும் கண்டிசனர் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம். தவிர, ஆடை வடிவமைப்பு, எம்பிராய்டரி, ஆரி மற்றும் இதர தையல் வேலைகள் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம். இவை தினசரி பயன்பாட்டுக்குத் தேவைப்படுபவையாக இருப்பினும், இதன் பயன்பாடு நீண்ட நாட்கள் வரை வரும். எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக தொழில் தொடங்கி சில காலங்களுக்குப் பின்னரே லாபம் கிடைக்கும். ஆகையால் உங்களுடைய தயாரிப்பு ஒரு நிலையான பெயரை அடையும் வரை காத்திருப்பது அவசியம்.
What's Your Reaction?






