மாம்பழம் வாங்கிய கஞ்சன் – Tamil stories
Tamil stories
மாம்பழம் வாங்கிய கஞ்சன் – Tamil stories
ஒரு கிராமத்தில் கஞ்சன் ஒருவன் வாழ்ந்து வந்தான் அவன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தன் வீட்டில் இருக்கும் தண்ணீரை கூட கொடுக்க மாட்டான். தண்ணீர் குறைந்து விடும் என்பதற்காக. அந்த அளவிற்கு கஞ்சன்.
வீட்டில் உணவு பண்டங்கள் தீர்ந்துவிடும் என்று சரியாக உணவும் உன்ன மாட்டான். அவனுக்கு நீண்ட நாட்களாக மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. மாம்பழம் வாங்கி சாப்பிட்டால் காசு செலவாகி விடும் என்று மனதில் நினைத்துக் கொண்டு மட்டும் இருந்தான்.
அடிக்கடி மாம்பழ கடைக்கு செல்வான் மாம்பழம் என்ன விலை என்று கேட்பான் ஆனால் வாங்க மாட்டான். விலை அதிகம் என்று சொல்லிவிட்டு வந்து விடுவான். ஒரு நாள் அந்த மாம்பழ கடையில் அடித்து பிடித்து பாதி விலையில் மாம்பழம் வாங்கி விட்டான்.
வாங்கிய மாம்பழத்தை ஒரு துண்டில் வைத்து கட்டி அதை பத்திரமாக யாருக்கும் தெரியாமல் மறைத்து மறைத்து வீட்டிற்கு எடுத்து வந்தான். ஒரு வழியாக மாம்பழத்தை வீட்டிற்கு எடுத்து வந்து விட்டான்.
வீட்டிற்கு வந்ததும் மாம்பழத்தை சாப்பிட மனமில்லாமல் அதை துண்டில் மூடி வைத்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான். பக்கத்து வீட்டுகாரர் அந்த வழியாக செல்லும் பொழுது கஞ்சனிடம் என்ன மாம்பழ வாசனை வருகிறது மாம்பழம் வாங்கி வந்திருக்கிறாயா என கேட்டார்.
அவ்வளவுதான் கஞ்சன் அந்த பக்கத்து வீட்டு காரரை பிடித்து கொண்டான். என் மாம்பழத்தின் வாசனையை நீ நுகர்ந்து விட்டாய் அதனால் என் மாம்பழம் சுவை குறைந்துவிட்டது இந்த மாம்பழத்திற்கான தொகை பாதியை நீ தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
எவ்வளவோ முயற்சி செய்தும் பக்கத்து வீட்டு காரால் தப்பிக்க முடியவில்லை. இனி இந்த கஞ்சனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.
உடனே நான் பணத்தை தருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வந்து கஞ்சனின் கண்ணில் படும்படி வைத்துவிட்டு மீண்டும் தனது சட்டை பையில் வைத்துக் கொண்டார்.
கஞ்சன் தனது பக்கத்து வீட்டுகாரரிடம் சண்டை போட்டான் ஏன் பணத்தை சட்டை பையில் வைக்கிறாய் பணத்தை என்னிடம் கொடு என்று கேட்டான்.
உடனே பக்கத்து விட்டுக்காரர் நீ எப்படி உன் மாம்பழத்தின் வாசனையை நுகர்ந்ததால் உன் மாம்பழத்தின் சுவை குறைந்துவிட்டது என்றாயோ அது போல தான் இதுவும் என் பணத்தை பார்த்ததால் என் பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது என்றார். அந்த கஞ்சனால் எதுவும் பேச முடியவில்லை அமைதியாக சென்று விட்டான்.
What's Your Reaction?