பழைய மொபைலை விற்கும் முன் ரீசெட் செய்வது எப்படி? முழு விவரங்கள்..!
உங்கள் பழைய மொபைலை விற்க விரும்பினாலோ அல்லது அதை யாருக்காவது கொடுக்க விரும்பினாலோ உங்கள் மொபைலை கண்டிப்பாக ரீசெட் செய்ய வேண்டும். இந்த செயல்முறைக்கு factory reset அல்லது hard reset என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் சாதனத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆப்ஸ் அமைப்புகள் ஆகிய அனைத்து டேட்டாக்களையும் அழித்துவிடும்.

மொபைல் ஃபோனை எப்படி ரீசெட் செய்வது?
1. . முதலில் மொபைலில் உள்ள settings செல்ல வேண்டும்.
2. settings பகுதியில் ரீசெட் என்ற பகுதிக்கு செல்லவும்.
3. அதன்பின் factory data reset அல்லது factory reset என்ற பகுதிக்கு செல்லவும்
4. அதன் பிறகு, ரீசெட் என்பதை க்ளிக் செய்யவும்
5. உங்கள் பாதுகாப்பு விருப்பத்தைப் பொறுத்து, பாஸ்வேர்ட், பேட்டர்ன் அல்லது கைரேகையைக் கேட்கும்.
6. பாஸ்வேர்டை பதிவு செய்த பிறகு, அனைத்தையும் நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
7. செயல்முறை தொடங்கிய பின் படிப்படியாக அனைத்து டேட்டாக்களும் நீக்கப்படும்
8. டேட்டாக்கள் அழிக்கப்பட்டவுடன் தானாகவே மொபைல் போன் boot ஆகிவிடும்.
இந்த பணிகள் முடிந்தவுடன் நீங்கள் தாராளமாக உங்கள் மொபைல் போனை பயமின்றி விற்கலாம் அல்லது யாருக்காவது கொடுக்கலாம்.
What's Your Reaction?






